பனையூர் அலுவலகத்திற்கு செல்லும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள்..? அடுத்து தவெகவில் இணையப்போவது யார்..? வெளியான பரபரப்பு தகவல்..! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 107 இடங்களில் வெற்றிப்பெற்ற விஜய் தலைமையிலான தவெக, தனி பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆனால், ஆட்சி அமைக்க தேவையான 118 இடங்கள் என்ற மேஜிக் இலக்கம் இல்லாத நிலையில், திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவை தவெக கோரியது.

அதன்படி, காங்கிரஸ் திமுக கூட்டணியில் இருந்து விலகி, தவெகவில் இணைந்து ஆட்சி அமைக்க ஆதரவு அளித்த நிலையில், தற்போது தவெக அமைச்சரவையில் இரண்டு அமைச்சர்களையும், மாநிலங்களவையில் ஒரு எம்.பி.யையும் பெற்றுள்ளது.

அடுத்து, விசிகவும், ஐ.யு.எம்.எல். ஆகியை முதலில் வெளியில் இருந்து ஆதரவு எனும் நிலைபாட்டை எடுத்து ஆதரவு அளித்தது. பின்னர் இரண்டு கட்சிகளும் தலா ஒரு அமைச்சர்களை தவெக அரசில் பெற்றுள்ளன. தொடர்ந்து சிபிஎம் மற்றும் சிபிஐ ஆகியை நிபந்தனையற்ற ஆதரவை தவெக அரசுக்கு வழங்கி வருகிறது.

ஆட்சியமைக்க தேவையான பேச்சுவார்த்தை நடந்த போது, அமமுக எம்.எல்.ஏ. காமராஜை தவெக கடத்தி விட்டதாகவும், அவரிடம் 'குதிரை பேரம்' நடத்தியதாகவும் அக்கட்சி பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதனைத் தொடர்ந்து நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு முன்பாக அதிமுகவில் தனி பிரிவாக செயல்பட்டுவந்த எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் தலைமையிலான அணியை முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் நேரில் சந்தித்தார்.

அதன் பின்னர், நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில், அதிமுகவின் எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் தலைமையிலான 25 எம்.எல்.ஏ.க்களும், அமமுக எம்.எல்.ஏ. காமராஜும் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

இதனையடுத்து, அதிமுக எம்.எல்.ஏ.க்களாக இருந்த மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா மற்றும் இசக்கி சுப்பையா ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர்.

இந்த விவகாரம் அதிமுக மற்றும் தமிழக அரசியலில் பெரும் புயலை ஏற்படுத்தியது. அடுத்து எஸ்.பி.வேலுமணி தலைமையில் சில எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தலைமை ஏற்று அதிமுகவில் உள்ளனர்.

இதன் காரணமாக அந்த அணியில் இருந்த அதிமுக முன்னாள் அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களுமான சி. விஜயபாஸ்கர், சி.வி. சண்முகம் உள்ளிட்ட சிலர் மட்டும் மீண்டும் திரும்பவில்லை. இவர்களும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு,  தவெகவில் இணையப்போவதாக பரவலாக பேசப்பட்டது. ஆனால் இருவரும் தங்கள் தொகுதிகளுக்கு சென்று அங்கே இருந்து வருகின்றனர்.

இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்ட சிலர் தவெகவில் இணைந்தனர். இந்தச் சூழலில், நாளை சில பரிச்சயமான அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் தவெகவின் தலைமை அலுவலகமான பனையூர் அலுவலகத்தில் அக்கட்சியில் இணைய இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Who are the former ADMK ministers set to join TVK next


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->