அண்ணாமலை போட்டியிடும் தொகுதி எது? டெல்லியை எதிர்த்து நிற்கும் அண்ணாமலை! பாஜக வேட்பாளர் பட்டியல் தாமதம் பின்னணி என்ன? - Seithipunal
Seithipunal


2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கையில், அதிமுக-பாஜக கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிவடைந்தாலும், பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு தொடர்ந்து தாமதமாகி வருகிறது. குறிப்பாக, தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்பது இன்னும் உறுதியாகாததே இந்த இழுபறிக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.

தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மயிலாப்பூர், அவிநாசி, கோவை வடக்கு, மதுரை தெற்கு, நாகர்கோவில், தஞ்சாவூர் உள்ளிட்ட முக்கிய தொகுதிகள் இதில் அடங்கும்.

ஆனால் இந்த ஒதுக்கீடு எளிதாக கிடைக்கவில்லை. ஆரம்பத்தில் பாஜக வெற்றி வாய்ப்பு அதிகமான தொகுதிகளை கோரிய நிலையில், அதிமுக உடனடியாக சம்மதிக்காததால் பேச்சுவார்த்தைகள் நீண்டதாக கூறப்படுகிறது. பின்னர் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தலையிட்ட பிறகே உடன்பாடு ஏற்பட்டது.

இந்நிலையில், அண்ணாமலை போட்டியிடும் தொகுதி குறித்து இன்னும் குழப்பம் நீடிக்கிறது. கோவை மாவட்டத்தில் சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம், கிணத்துக்கடவு போன்ற தொகுதிகளில் அவர் களம் காணலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவை இறுதி பட்டியலில் இடம் பெறாததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், கோவை தெற்கு எம்எல்ஏ வானதி சீனிவாசன் தனது தொகுதியை மாற்ற முயன்றதும் இந்த கணக்கில் தாக்கத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் அண்ணாமலைக்கு ஏற்ற தொகுதியை தேர்வு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சென்னையில் நடைபெற்ற பாஜக முக்கிய கூட்டத்தில் அண்ணாமலை நேரடியாக தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதாகவும், சென்னை மற்றும் கோவை பகுதிகளில் கூடுதல் தொகுதிகளை பெற முயற்சி போதுமானதாக இல்லை எனக் குறிப்பிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின்றன. இதையடுத்து, சில தொகுதிகளை மாற்றுவது குறித்து அதிமுகவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என மத்திய தரப்பு உறுதியளித்ததாக கூறப்படுகிறது. எனினும் அதிமுக தரப்பில் முழு ஒப்புதல் இன்னும் கிடைக்கவில்லை.

வேட்புமனு தாக்கல் செய்யும் காலக்கெடு நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், அண்ணாமலைக்கு எந்த தொகுதி ஒதுக்கப்படும் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடும் இதனால் தாமதமாகி வருவது கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Which constituency is Annamalai contesting Annamalai is standing against Delhi What is the background behind the delay in BJP candidate list


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->