தவெகவின் சின்னம் எப்போது கிடைக்கும்? தேர்தலுக்கு முன் ஒதுக்கப்படும் சின்னம் இதுதான்! வெளியான முக்கிய அப்டேட்!
When will the Tvk symbol be available This is the symbol that will be allocated before the election Important update released
சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிடும் பதிவு செய்யப்பட்ட, ஆனால் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள், பொதுச் சின்னம் கோரி இந்திய தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பிக்க உரிமை பெற்றுள்ளன. அந்த அடிப்படையில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) பொதுச் சின்னம் கோரி தாக்கல் செய்த விண்ணப்பத்தின் தற்போதைய நிலை குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளை இரண்டு முக்கிய பிரிவுகளாக வகைப்படுத்தியுள்ளது. ஒன்று, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள்; மற்றொன்று, பதிவு செய்யப்பட்ட ஆனால் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள். தமிழக வெற்றிக் கழகம் தற்போது இரண்டாவது பிரிவில் தான் உள்ளது. மாநில கட்சி என்ற அங்கீகாரம் பெற, ஒரு அரசியல் கட்சி தேர்தலில் குறைந்தது 6 சதவீத வாக்குகளைப் பெற்று, இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் அல்லது மொத்த தொகுதிகளில் 3 சதவீத இடங்களை வெல்ல வேண்டும். தமிழகத்தில் மொத்தம் 234 சட்டமன்றத் தொகுதிகள் உள்ள நிலையில், 3 சதவீதம் என்றால் குறைந்தது 7 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டிய நிலை உருவாகிறது. மாற்றாக, எந்த தொகுதியிலும் வெற்றி பெறாவிட்டாலும் குறைந்தது 8 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தால் மாநில கட்சி அங்கீகாரம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
ஆனால் தவெக இதுவரை எந்த தேர்தலையும் சந்திக்காததால், மேற்கண்ட எந்த நிபந்தனைகளையும் பூர்த்தி செய்யவில்லை. எனவே, அது பதிவு செய்யப்பட்ட ஆனால் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சியாகவே தற்போது உள்ளது. இத்தகைய கட்சிகள் தேர்தலில் போட்டியிடும் போது, தேர்தல் ஆணையத்திடம் பொதுச் சின்னம் ஒதுக்கக் கோரி விண்ணப்பிக்கலாம். அந்த விதிப்படியே தவெகவும் பொதுச் சின்னம் கோரி விண்ணப்பித்துள்ளது.
இந்த விண்ணப்பம் தற்போது தேர்தல் சின்னங்கள் (ஒதுக்கீடு மற்றும் பங்கீடு) ஆணை, 1968-இன் பத்தி 10B-ன் கீழ் பரிசீலனையில் இருப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உரிய நடைமுறைகள் முடிந்த பிறகு, தமிழ்நாடு மற்றும் கேரள சட்டமன்றத் தேர்தல்களுக்கு முன்பாக தவெக-க்கு ஒரு பொதுச் சின்னம் ஒதுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
பத்தி 10B-ன் கீழ் பொதுச் சின்னம் பெற, பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் கடந்த மூன்று நிதியாண்டுகளுக்கான நன்கொடை அறிக்கைகள் மற்றும் ஆண்டு தணிக்கை அறிக்கைகளை முறையாக தாக்கல் செய்திருக்க வேண்டும் என்பது முக்கிய நிபந்தனையாகும். தவெக தரப்பில், 2024–25 நிதியாண்டிற்கான நன்கொடை விவரங்களும் ஆண்டு தணிக்கை அறிக்கைகளும் விதிப்படி சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் அடிப்படையில், வழக்கமாக நடைமுறையில் இருப்பது போல, தேர்தல் அறிவிப்பு வெளியாகுவதற்கு சற்று முன்னதாக தமிழக வெற்றிக் கழகத்திற்கு பொதுச் சின்னம் அதிகாரப்பூர்வமாக ஒதுக்கப்படும் என அரசியல் மற்றும் தேர்தல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
English Summary
When will the Tvk symbol be available This is the symbol that will be allocated before the election Important update released