சாத்தூர் தொகுதியில் போட்டியிடும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சொத்து மதிப்பு எவ்வளவு..? - Seithipunal
Seithipunal


தமிழக சட்டமன்ற தேர்தலில், பாஜக சார்பில் அக்கட்சியின் மாநில தலைவர் சாத்தூர் தொகுதியில் நயினார் நாகேந்திரன் போட்டியிடுகிறார். இந்த தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ள நிலையில், அவரது சொத்து மதிப்பு விவரம் வெளியாகியுள்ளது. 

அவரிடம் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் என மொத்தம் அவருக்கு ரூ.20.76 கோடி உள்ளதாக வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் உள்ள பாஜக கட்சி 27 தொகுதிகளில் போட்டியிடவுள்ளது. வேட்புமனு தாக்கல் செய்வதற்கு இறுதி நாளான இன்று நயினார் நாகேந்திரன் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார்.

 அவர் தனது வேட்புமனுவில் அசையும் சொத்தாக ரூ.12.50 கோடியும், அசையா சொத்தாக ரூ.8.26 கோடி என மொத்தம் ரூ.20.76 கோடி உள்ளதாக தெரிவித்துள்ளார். தனது துணைவியார் சந்திரா நாகேந்திரன் பெயரில் அசையும் சொத்தாக ரூ.11.61 கோடியும் அசையா சொத்தாக ரூ.6.17 கோடி உள்ளதாக தெரிவித்துள்ளார்.

நயினார் நாகேந்திரன் பெயரில் ரூ.2.6 கோடி மதிப்பிலான 240 சவரன் நகையும், அவரது மனைவி பெயரில் ரூ.6.2 கோடி மதிப்பில் 560 சவரன் உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் தனது பெயரில் ரூ.1.94 கோடி கடனும் தனது மனைவி பெயரில் ரூ.65 லட்சம் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 31 ஆம் தேதி தொடங்கிய நிலையில் இன்றுடன் வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றது. இதுவரை 4100-க்கும் மேற்பட்டோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெறவுள்ளது. வேட்புமனுவில் சரியான தகவல் குறிப்பிடாத நபர்கள் மற்றும் விதிமுறை மீறல்கள் உள்ள வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டு வரும் 09 ஆம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

What is the net worth of BJP State President Nainar Nagendran who is contesting from the Sattur constituency


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->