ஈழத் தமிழருக்காக யார் குரல் கொடுத்தாலும் வரவேற்போம்...அது விஜயாக இருந்தாலும் சரி...! -வைகோ
We welcome anyone who raises voice Eelam Tamilan we appreciate vijay Vaiko
சென்னை எழும்பூரில் அமைந்துள்ள ம.தி.மு.க தலைமை அலுவலகத்தில், தமிழ் ஈழ விடுதலை வீரர் திலீபன் நினைவு நாள் சிறப்பாக அனுசரிக்கப்பட்டது.
அவரது உருவப்படத்திற்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தியவர்களில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் 'வைகோ', மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, திரைப்பட இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் உள்ளிட்டோர் முன்னிலையிலிருந்தனர்.

இந்த நிகழ்வைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்களிடம் பேசிய வைகோ குறிப்பிட்டதாவது,"தமிழ் ஈழத்தின் வரலாற்றில் அழியாத முத்திரை பதித்த வீரர் திலீபன். ஏழு அணு ஆயுத வல்லரசுகளின் அச்சுறுத்தலுக்கு எதிராக, வெறும் ஏழாயிரம் வீரர்களின் உறுதியால் அதிரடியான வெற்றிகளைப் பெற்றார்.
தாயைப் போல பாசம் பொழியும் தலைவருக்காக ஏங்கும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக, த.வெ.க தலைவர் விஜய் தனது பிரசாரத்தில் குரல் கொடுத்திருப்பது மனதார பாராட்டத்தக்கது.
ஈழத் தமிழர்களுக்காக யார் பேசினாலும், அது எப்போதும் வரவேற்கத்தக்கதே"என்று தெரிவித்துள்ளார். மேலும் இதனை பலரும் இணையத்தில் பாராட்டி வருகின்றனர்.
English Summary
We welcome anyone who raises voice Eelam Tamilan we appreciate vijay Vaiko