தவெக அரசுக்கு நாங்கதான் காவல் அரண்...! - முதலமைச்சர் விஜய்க்கு வைகோ கொடுத்த ‘மாஸ்’ உறுதிமொழி...! - Seithipunal
Seithipunal


திருப்பூரில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களைச் சந்தித்து மாநில அரசியல் நிலவரம், த.வெ.க. அரசின் செயல்பாடு மற்றும் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் குறித்து பல்வேறு கருத்துகளை வெளிப்படுத்தினார்.அப்போது பேசிய அவர், த.வெ.க. அரசு பொறுப்பேற்ற பிறகு நிர்வாகத்தில் நிலவி வந்த கட்டிங் மற்றும் ஊழல் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

எந்தவித ஆதாரமும் இல்லாமல் குதிரைப் பேரம் என்ற குற்றச்சாட்டை திமுக தொடர்ந்து முன்வைத்து வருவதாகவும் அவர் விமர்சித்தார்.மேலும், தங்களது கட்சியைச் சேர்ந்தவர்களை திமுக தனது தேர்தல் சின்னத்தில் போட்டியிடச் செய்து பின்னர் தங்களுடன் இணைத்துக் கொண்டதுதான் உண்மையான குதிரைப் பேரம் என்றும் வைகோ குற்றம்சாட்டினார்.

இதைத் தொடர்ந்து பேசிய அவர், ஊழலை அடியோடு ஒழிக்கும் நோக்கத்துடன் செயல்படும் அரசாக த.வெ.க. அரசு இருப்பதால், அந்த அரசுக்கு மதிமுக தொடர்ந்து உறுதியான ஆதரவை வழங்கும் என்றார்.

மேலும், விஜய் தலைமையிலான அரசுக்கு மதிமுக காவல் அரணாகவும், போர்க்கவசமாகவும் இருந்து முழு பாதுகாப்பு அளிக்கும் என்றும் உறுதிபட தெரிவித்தார்.

ஆளுநர் ஆட்சியை அமல்படுத்தி அதன் மூலம் பாஜக ஆட்சியை அமைக்கலாம் என சிலர் பகற்கனவு கண்டதாகவும், ஆனால் அந்த முயற்சிகள் அனைத்தும் முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் வைகோ குறிப்பிட்டார்.

த.வெ.க. அரசை பதவியில் இருந்து அகற்றுவதற்காக பல்வேறு அரசியல் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக கூறிய அவர், முதலமைச்சர் விஜய் ஒவ்வொரு விவகாரத்தையும் ஆழமாக ஆராய்ந்து, முழுமையாகப் புரிந்துகொண்டு முடிவுகளை எடுத்து வருகிறார் என்றார்.

மேலும், இன்னும் ஆறு மாதங்களில் முதலமைச்சர் விஜய் மிகுந்த நிர்வாகத் திறன் கொண்ட தலைவராக உருவெடுப்பார் என்ற நம்பிக்கையையும் வைகோ வெளிப்படுத்தினார்.இறுதியாக, வரவிருக்கும் இடைத்தேர்தலில் மதிமுக போட்டியிடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

We security Tvk government Vaiko mass promise Chief Minister Vijay


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->