வார்த்தைப் போர் தீவிரம்: 'இளைஞர்களை சீரழித்த திமுக ஆட்சி'...! - எடப்பாடி பழனிச்சாமி கடும் தாக்கு
War words intensifies DMK regime corrupted youth Edappadi Palaniswami attacks
எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்று வரும் ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ எழுச்சி பயணத்தின் ஒரு பகுதியாக, நேற்று 183வது தொகுதியாக அம்பத்தூரில் அவர் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசுகையில், மதுரையில் நடைபெற்ற கூட்டத்தில் தன்னை ‘துரோகி’ என்று விமர்சித்த மு.க.ஸ்டாலின் குறித்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்தார்.

“உண்மையான துரோகி யார் என்பதை மக்கள் நன்றாக அறிவார்கள். திமுக ஆட்சி பொறுப்பேற்று ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை.
அதற்கு பதிலாக போதைப் பொருட்கள் விற்பனை அதிகரித்துள்ளது; கஞ்சா போன்றவை எளிதில் கிடைக்கும் சூழல் உருவாகியுள்ளது. இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழித்த இந்த நிலைக்கு காரணம் திமுக ஆட்சிதான்,” என அவர் கடுமையாக குற்றம்சாட்டினார்.
மேலும், “இளைஞர்களை போதைக்கு தள்ளி குடும்பங்களையே பாதித்த இந்த ஆட்சி மக்களுக்கு எதிரானது” என்றும் தெரிவித்தார்.
இதற்கு முன்பு மதுரையில் நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கழகம் முகவர்கள் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “மத்திய அரசிடம் மாநிலத்தின் உரிமைகளை கேட்கத் தயங்கும், கோரிக்கையே வைக்காத தைரியம் இல்லாதவர் இபிஎஸ்,” என்று எடப்பாடி பழனிசாமியை விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
English Summary
War words intensifies DMK regime corrupted youth Edappadi Palaniswami attacks