அது நடக்கும்! நடந்தே தீரும் - கோடநாட்டில்  வி.கே.சசிகலா கண்ணீர் மல்கப் பேட்டி! - Seithipunal
Seithipunal


மறைந்த தமிழக முதலமைச்சரும் அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா மறைவுக்குப் பின், நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட் பங்களாவில் கொலை, கொள்ளை சம்பவம் அரங்கேறியது.

இது தொடர்பான வழக்கு உதகை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், வி.கே.சசிகலா இன்று கோடநாடு பங்களாவை பார்வையிட வந்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வி.கே.சசிகலா தெரிவிக்கையில், "கோடநாடு தோட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களைப் பார்க்க வந்துள்ளேன். 

ஆனால், இப்படி ஒரு சூழ்நிலையில் வருவேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை. கோடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு, ஜெயலலிதா தெய்வமாக இருந்து தண்டனையைப் பெற்றுத் தருவார் என நம்புகிறேன்.

கோடநாடு பங்களாவில் ஜெயலலிதாவிற்குப் பூஜை செய்ய வேண்டும் என்பதற்காக வந்துள்ளேன். விரைவில் அவரது உருவப்படம் இங்கு திறக்கப்படும்.

அதிமுக ஒன்றுபடத் தொடர்ந்து முயன்று வருகிறேன். அந்த முயற்சி விரைவில் வெற்றி பெறும். அதிமுக ஒன்றுபட ஒருவருக்கு ஒருவர் விட்டுத் தர வேண்டும்" என்று வி.கே.சசிகலா கண்ணீர் மல்க தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

VK Sasikala Kodanad PRESS MEET


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->