PMLA வழக்கில் இனி "ஜாமீன் எடுக்க தேவையில்லை ".. உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.!! - Seithipunal
Seithipunal


சட்டவிரோத பண பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் சம்மன்களின்படி நீதிமன்றத்தில் ஆஜரான குற்றம் சாட்டப்பட்டவர் ஜாமீன் பெறுவதற்கு பிரிவு 45ன் இரட்டை நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டுமா? என்பது குறித்து உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.

சட்டவிரோத பண பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் குற்றம் சாட்டப்பட்ட நபர்களை அமலாக்கத்துறை கைது செய்வதும், ஜாமீன் வழங்க மறுப்பதும் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில் சம்மனைப் பின்பற்றி நீதிமன்றத்தில் ஆஜரான குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஜாமீனுக்கு விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை, எனவே சட்டவிரோத பண பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் பிரிவு 45ன் படி இரட்டை நிபந்தனைகள் பொருந்தாது என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.

மேலும் சட்டவிரோத பண பரிவர்த்தனை தடுப்புச் சட்டம் பிரிவு 44(1)(b) இன் கீழ் தாக்கல் செய்யப்பட்ட புகார் Cr.P.C. இன் விதிகளால் நிர்வகிக்கப்படும் என்று நீதிமன்றம் கருதுகிறது. எனவே குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்படாமல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டால், ஒரு சாதாரண விதியாக குற்றம் சாட்டப்பட்டவர் வரவழைக்கப்படுவார். ஆனால் அவர் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்காவிட்டால் அதனை உறுதியாக கூற முடியாது

சம்மன் உத்தரவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர் நீதிமன்றத்தில் ஆஜராகினால், அவரை காவலில் வைத்திருப்பது போல் கருதக்கூடாது.எனவே, குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஜாமீன் கோரி விண்ணப்பிக்கத் தேவையில்லை.

மேலும் சட்டவிரோத பண பரிவர்த்தனை தடுப்புச் சட்டம் பிரிவு 88 Cr.P.C இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஜாமீன் பத்திரத்தை வழங்க சிறப்பு நீதிமன்றம் கோரலாம். எவ்வாறாயினும் சட்டவிரோத பண பரிவர்த்தனை தடுப்புச் சட்டம் பிரிவு 88 இன் கீழ் ஜாமின் பத்திரத்தை ஏற்றுக்கொள்வது என்பது ஜாமீன் வழங்குவதற்கு சமமானதல்ல. எனவே சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தரபபு சட்டத்தின் பிரிவு 45ன் படி இரட்டை நிபந்தனைகள் அதற்குப் பொருந்தாது என உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Supreme Court verdict Bail not required in PMLA case


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->