யோகி ஆதித்யநாத் இன்னும் 3மாதங்களில் பதிவியில் இருந்து நீக்கப்படுவார் - அரவிந்த் கெஜ்ரிவால்!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் 4கட்ட மக்களவை தேர்தல் நிறைவடைந்த நிலையில், 5ம் கட்ட மக்களவை தேர்தலுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி தீவிர பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வருகிறது. அந்த வகையில் மதுபான ஊழல் வழக்கில் அமலாக்கதுறையினரால் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளிய வந்த அரவிந்த் கெஜ்ரிவால் இண்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து உத்தரபிரதேசம் மாநிலம் லக்னோவில் பிரச்சாரம் மேற்கொண்டுடார்.

பின்னர், அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ்யுடன் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தார். அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகையில், இண்டியா கூட்டணி வாக்கு கேட்டு உத்தரபிரதேசம் வந்துள்ளேன். அமித்ஷாக்காக மோடி வாக்கு சேகரிக்கிறார். பாஜக எஸ்.சி, எஸ். டி இடஒதுக்கீட்டை ரத்துசெய்ய முயற்சி செய்து வருகிறது. 

ஜூன் 4ம் தேதி இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வருவது உறுதி. அடுத்தாண்டு செப்டம்பர் 17ம் தேதியுடன் மோடிக்கு 75 வயசு ஆகிவிடும். அதன் பின்னர் பிரதமராக அமித்ஷாக்கு வழிவிட மோடி முடிவெடுப்பார். உத்தரபிரதேசம் முதலமைச்சர் யோகி ஆதித்தியநாத் 2 அல்லது 3 மாதங்களில் முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்படயுள்ளார் என்று பேசினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Yogi Adityanath will be delisted in 3 months - Arvind Kejriwal


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->