விஜயின் பிரசார விபத்து வழக்கு தீவிரம்!-த.வெ.க. நிர்வாகிகள் உச்சநீதிமன்றத்தை நாடியதால் அரசியல் பரபரப்பு! - Seithipunal
Seithipunal


கரூர் அருகே வேலுச்சாமிபுரத்தில் த.வெ.க. தலைவர் விஜய், கடந்த மாதம் 27ஆம் தேதி நடத்திய பிரசார நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சோகம் நாடு முழுவதும் அதிர்வை ஏற்படுத்தியது.

இதனால் 41 பேர் உயிரிழந்தது, பலர் காயமடைந்தனர்.இந்த பேரழிவைத் தொடர்ந்து, காவல்துறையினர் கட்சியின் முக்கிய நிர்வாகிகளான புஸ்ஸி ஆனந்த் மற்றும் சிடிஆர் நிர்மல் குமார் உள்ளிட்டோர்மீது வழக்குப் பதிவு செய்தனர்.

மேலும், கரூர் மாவட்டச் செயலாளர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.இந்நிலையில், மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்யப்பட்ட முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

முன்ஜாமின் மனுவை விரைந்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நாளை உச்ச நீதிமன்றத்தில் முறையிடும் திட்டம் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vijays campaign accident case intensifies Political turmoil TVK executives approach Supreme Court


கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...




Seithipunal
--> -->