விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்.. தமிழக அரசுக்கு விஜயகாந்த கோரிக்கை.!! - Seithipunal
Seithipunal


அரசு அறிவித்த கூலி உயர்வை அமல்படுத்தி, விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு அறிவித்த கூலி உயர்வை ஒப்பந்த வடிவில் வழங்க மறுக்கும் ஜவுளி உற்பத்தியாளர்களை கண்டித்து திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர் சங்கங்கள் கடந்த ஜனவரி 9ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 பலகட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகும் ஜவுளி உற்பத்தியாளர்களுக்கும் விசைத்தறியாளர்களுக்கும் இடையே கூலி உயர்வு ஒப்பந்தம் நிறைவேற்றப்படாததால், போராட்டம் இன்னும் நீடித்து வருகிறது.

 அரசு அறிவித்த கூலி உயர்வை ஜவுளி உற்பத்தியாளர்கள் அமல்படுத்துவதில் மேலும் காலதாமதம் செய்யாமல் ஒப்பந்த வடிவில் கையெப்பமிட்டு கூலி உயர்வை அமல்படுத்தி லட்சக்கணக்காண விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை 
பாதுகாக்க வேண்டும். 

 விசைத்தறியாளர்களின் தொழில் நிலைமையை கருத்தில் கொண்டு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து கூலி உயர்வை பெற்றுத் தர வேண்டும் என தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vijayakanth statement on feb 24


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->