தமிழக அரசு தனிக்குழு அமைத்து கண்காணித்தால் தான் விபத்தை தடுக்க முடியும்.. விஜயகாந்த்.!! - Seithipunal
Seithipunal


தமிழக அரசு துறை சார்ந்த தனிக்குழுவை அமைத்து கண்காணித்தால் மட்டுமே, பட்டாசு விபத்துகளை தடுக்க முடியும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த தெரிவித்துள்ளார்.

ஆங்கில புத்தாண்டு நன்நாளில், விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஆ. புதுப்பட்டி கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி, 5  பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.

தொடர்ந்து நடைபெற்று வரும் பட்டாசு வெடி விபத்துகளை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு தேமுதிக சார்பில் ஏற்கனவே பலமுறை அறிக்கை அளித்தும், தமிழக அரசு நடவடிக்கை எடுக்க தவறியதால் இதுபோன்ற விபத்துகள் நடைபெறுகிறது.

 இனிவரும் காலங்களில்  பட்டாசு விபத்துகளை தடுக்க, உரிமம் இல்லாத பட்டாசு ஆலைகளை கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்வதுடன், தமிழக அரசு துறை சார்ந்த தனிக்குழுவை அமைத்து பட்டாசு ஆலைகளை கண்காணிக்க வேண்டும். மேலும் பட்டாசு தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டும்.  சிவகாசி பட்டாசு விபத்தில்  படுகாயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vijayakanth says about fireworks accident


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->