பள்ளி வளாகத்தில் எரிந்த நிலையில் மாணவியின் சடலம்.. தமிழகத்தில் அதிகரிக்கும் குற்றங்கள்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் பெண்களுக்குப் பாதுகாப்பும், சுதந்திரமும் இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலை பாச்சலூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், 5 ஆம் வகுப்பு படிக்கும்  மாணவி ஒருவர்  எரிந்த நிலையில் பள்ளி வளாகத்திற்குள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது. 

இதேபோல் கோவை அருகே சரவணம்பட்டி பகுதியில் உள்ள யமுனா நகரில் கை,கால்கள் கட்டப்பட்டு அழுகிய நிலையில், 15 வயது சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இச்சம்பங்கள் எதனால் நடந்தது ? இதற்கு காரணமானவர்கள் யார்? இதில் பாலியல் வன்கொடுமைகள் ஏதேனும் நடைபெற்றுள்ளதா என்பது குறித்து தீவிரமாக விசாரிக்க வேண்டும். மேலும் இச்சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளை காவல்துறை உடனடியாக கைது செய்து அவர்களுக்கு உரிய தண்டனை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 சுதந்திரமடைந்து 75 ஆண்டுகளாகியும் இந்தியாவில் பெண்களுக்குப் பாதுகாப்பும், சுதந்திரமும் இன்னும் கேள்விக்குறியாகவே இருக்கிறது. குறிப்பாக தமிழகத்தில் பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதனை தடுக்க தமிழக அரசு கடுமையான சட்டங்களை இயற்றி இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். பெண்கள் நாட்டின் கண்கள். அந்த கண்களை இமை போல்  காப்பது தமிழக அரசின் கடமை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vijayakanth says about crime against women


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->