ஆங்கிலத்துக்கு மாற்று மொழியாக இந்தியை ஒருபோதும் தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.. விஜயகாந்த்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் ஆங்கிலத்திற்கு மாற்ற இந்தி மொழியை அலுவல் மொழியாக ஏற்க வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து, ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தியை ஏற்றுக்கொள்ள முடியாது என பல அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக பாமக நிறுவனர் ராமதாஸ், முதலமைச்சர் முக ஸ்டாலின், தமிழ் காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி, நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் தமிழக அமைச்சர்கள் உள்ளிட்டோர் கருத்து தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில், இந்தி தொடர்பான அமித்ஷாவின் கருத்து குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது முகநூல் பக்கத்தில், அன்னை மொழியை காப்போம், அனைத்து மொழியை கற்போம், என்பதே தேமுதிகவின் நிலைப்பாடு. தாய்மொழியான தமிழ் மொழியை தவிர்த்து, ஆங்கிலத்துக்கு மாற்று மொழியாக இந்தியை ஒருபோதும் தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதே தேமுதிகவின் நிலைப்பாடு என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vijayakanth FB Post for Hindi Issue


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->