எம்.ஜி.ஆரின் சாதனையை முறியடித்த விஜய்: 34.75% வாக்கு விழுக்காட்டுடன் தவெக அதிரடி!
Vijay TVK Surpasses MGR 1977 Record with 34 Vote Share
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026-ன் வாக்கு எண்ணிக்கை முடிவுகள், மாநில அரசியலில் ஒரு புதிய சரித்திரத்தை எழுதி வருகின்றன. நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 105-க்கும் அதிகமான தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ள செய்தி, அக்கட்சியினரிடையே மற்றும் ரசிகர்களிடையே எல்லையற்ற உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசியல் வரலாற்றில் கட்சித் தொடங்கிய உடனேயே மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்திய தலைவராக இதுவரை மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் மட்டுமே கருதப்பட்டார். அவர் கடந்த 1977-ஆம் ஆண்டு தேர்தலில் முதன்முதலாகப் போட்டியிட்டபோது, 33.52 சதவீத வாக்குகளைப் பெற்று ஆட்சியைக் கைப்பற்றினார். ஆனால், தற்போது மதியம் 3 மணி நிலவரப்படி தவெக தலைவர் விஜய் 34.75 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று, எம்.ஜி.ஆரின் அந்த வரலாற்றுச் சாதனையை முறியடித்துள்ளார்.
எம்.ஜி.ஆருக்குப் பிறகு தமிழகத்தில் ஒரு மாற்று சக்தியாகத் தனது முதல் தேர்தலிலேயே இவ்வளவு பெரிய வாக்கு வங்கியைப் பெற்றுள்ள ஒரே தலைவராக விஜய் உருவெடுத்துள்ளார். இருமுனைப் போட்டியைத் தகர்த்து, சுமார் 35 சதவீத வாக்கு வங்கியைத் தன்வசப்படுத்தியுள்ள விஜய்யின் இந்த எழுச்சி, தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய அதிகார மாற்றத்தை உறுதி செய்துள்ளது.
English Summary
Vijay TVK Surpasses MGR 1977 Record with 34 Vote Share