110 இடங்களில் தவெக முன்னிலை; நடிகர் விக்ரம், சிவகார்த்திகேயன் விஜய்க்கு வாழ்த்து! குவியும் திரையுலகின் வாழ்த்துகள்!
TN Elections 2026 Indian Celebrities Hail Vijay Historic Lead as TVK Hits 110 Seats
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 110 தொகுதிகளில் முன்னிலை பெற்று மாநில அரசியலில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. தான் போட்டியிட்ட பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் விஜய் மிக அதிக வாக்குகளுடன் முன்னிலையில் இருப்பதால், அவர் இரண்டு இடங்களிலும் வெற்றி பெறுவது உறுதி என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் தேர்தல் எழுச்சி இந்திய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளதால், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த முன்னணிப் பிரபலங்கள் விஜய்க்குத் தங்கள் வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்:
நடிகர் நானி: ஆரம்பத்தில் சந்தேகங்கள் இருந்தாலும், தற்போது கிடைத்துள்ள வெற்றி ஒரு அபாரமான சினிமா கிளைமாக்ஸ் போல அமைந்துள்ளது என நெகிழ்ந்துள்ளார். மேலும், தமிழக மக்களின் தெளிவான முடிவால் இனிப் பெரிய மாற்றங்கள் நடக்கும் எனத் தனது நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார்.
பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப்: மக்கள் விஜய் மீது வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையைக் கண்டு வியப்படைவதாகவும், அவரது அடுத்தகட்ட அரசியல் பயணத்திற்கு அதிக பலம் கிடைக்கட்டும் என்றும் வாழ்த்தியுள்ளார்.
இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்: விஜய்யின் இந்த முன்னேற்றத்தைத் தமிழக வரலாற்றில் முன் எப்போதும் கண்டிராத மாபெரும் வெற்றி என வர்ணித்துள்ளார்.
மேலும் நடிகர்கள் விக்ரம், சிவகார்த்திகேயன் உள்ளிட்டவர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தமிழக மக்களின் ஆதரவுடன் ஒரு புதிய அரசியல் சக்தியாகத் தவெக உருவெடுத்துள்ளதை இந்தியத் திரையுலகமே வியப்புடன் கவனித்து வருகிறது.
English Summary
TN Elections 2026 Indian Celebrities Hail Vijay Historic Lead as TVK Hits 110 Seats