சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் வெற்றி: தந்தை ஸ்டாலின் தோல்வி!
Udhayanidhi Stalin Secures Victory in Chepauk TVKs Selvam Defeated
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026-ன் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் இன்று காலை 8 மணி முதல் விறுவிறுப்பாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. திமுகவின் மிக முக்கியமான நட்சத்திரத் தொகுதியாகக் கருதப்படும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில், (முன்னாள் துணை முதல்வர்) உதயநிதி ஸ்டாலின் தனது வெற்றியை உறுதி செய்துள்ளார்.
இத்தொகுதியில் காலை முதலே முன்னிலை வகித்து வந்த அவர், இறுதியில் தனது பலத்தை நிரூபித்துள்ளார்.
இந்தத் தொகுதியில் உதயநிதி ஸ்டாலினை எதிர்த்துத் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சார்பில் களம் கண்ட செல்வம், தொடக்கத்தில் கடும் சவாலை அளித்தார்.
இருப்பினும், 13 சுற்று வாக்கு எண்ணிக்கைகள் நிறைவடைந்த நிலையில், உதயநிதி ஸ்டாலின் 51,543 வாக்குகளைப் பெற்றுத் தனது வெற்றியை நிலைநாட்டினார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தவெக வேட்பாளர் செல்வம் 41,662 வாக்குகளைப் பெற்றுத் தோல்வியைத் தழுவினார்.
இதன் மூலம் உதயநிதி ஸ்டாலின் 9,881 வாக்குகள் வித்தியாசத்தில் மீண்டும் தனது தொகுதியைக் கைப்பற்றியுள்ளார்.
English Summary
Udhayanidhi Stalin Secures Victory in Chepauk TVKs Selvam Defeated