மேற்கு வங்கத்தில் பாஜக வரலாற்றுச் சாதனை; அதிகாரம், காட்டாட்சி, ஆணவத்தால் வீழ்ந்த மமதாவின் திரிணமூல்! - Seithipunal
Seithipunal


மேற்கு வங்க அரசியலில் பல தசாப்தங்களாக நிலவி வந்த கோட்டைகளைத் தகர்த்து, பாரதிய ஜனதா கட்சி ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை நோக்கி முன்னேறி வருகிறது. இன்று மாலை 6 மணி நிலவரப்படி, மொத்தமுள்ள தொகுதிகளில் பாஜக 204 இடங்களில் முன்னிலை பெற்று அசத்தி வருகிறது.

இதில் ஏற்கனவே 33 தொகுதிகளில் அக்கட்சி அதிகாரப்பூர்வமாக வெற்றி பெற்றுள்ளது. கடந்த தேர்தலில் வெறும் 77 இடங்களில் மட்டுமே வென்ற பாஜக, இம்முறை 200-க்கும் அதிகமான இடங்களைக் கைப்பற்றி மேற்கு வங்கத்தில் முதல்முறையாகத் தனித்து ஆட்சியமைக்க உள்ளது.

மறுபுறம், தொடர்ந்து நான்காவது முறையாக ஆட்சியைப் பிடிக்கத் துடித்த மமதா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு இத்தேர்தல் ஒரு பேரிடியாக அமைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, திரிணமூல் காங்கிரஸ் 10 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதுடன், 73 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. பவானிபூர் தொகுதியில் போட்டியிட்ட முதலமைச்சர் மமதா பானர்ஜி, தொடக்கத்தில் பின்னடைவைச் சந்தித்தாலும், தற்போது 5,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுத் தனது கௌரவத்தைத் தக்கவைக்கப் போராடி வருகிறார்.

தேர்தல் நிலவரம் ஒரு பார்வையில்:

பாஜக: 204 இடங்களில் முன்னிலை பெற்று, ஆட்சியைப் பிடிக்கிறது.

திரிணமூல் காங்கிரஸ்: 10 வெற்றி மற்றும் 73 இடங்களில் முன்னிலை.

இதர கட்சிகள்: காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கூட்டணி தலா 2 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகிக்கின்றன.

மமதாவின் அதிகாரம், காட்டாட்சி, ஆணவ அரசியலை வீழ்த்தி பாஜக நிகழ்த்தியுள்ள இந்த மாற்றம், கிழக்கு இந்திய அரசியலில் ஒரு புதிய சகாப்தத்தின் தொடம் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

BJP Scripts History in West Bengal Mamata Fortress Crumbles


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?


செய்திகள்



Seithipunal
--> -->