அனல் பறக்கும் போராட்டம்! விஜய் கட்சியினர் கூண்டோடு கைது!  - Seithipunal
Seithipunal



சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தைச் சேர்ந்த கோவில் காவலாளி அஜித்குமார் லாக்அப் மரணத்திற்கு நீதி கோரி, த.வெ.க. சார்பில் இன்று சென்னை சேப்பாக்கத்தில் மாபெரும் போராட்டம் நடைபெற்று வருகிறது. 

அக்கட்சி தலைவர் விஜய் நேரில் கலந்து கொள்வதால், இது கட்சியின் முக்கிய போராட்டமாக மாறியுள்ளது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்துக்காக சென்னை போலீசார் 15 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளனர். 

பொதுமக்கள், போக்குவரத்து மற்றும் சட்ட ஒழுங்குக்கு இடையூறு ஏற்படக்கூடாது என்பதற்காக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களே பங்கேற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும், தலைவர் விஜயின் நேரடி பங்கேற்பு காரணமாக மாநிலம் முழுவதும் இருந்து கட்சித் தொண்டர்கள் சென்னையை நோக்கி திரண்டுள்ளனர்.

இதன் ஒரு பகுதியாக, காஞ்சிபுரத்தில் இருந்து ஐந்து வாகனங்களில் 100க்கும் மேற்பட்ட தொண்டர்கள் செல்வதற்காக காத்திருந்த வேளையில், இடநெருக்கடி காரணமாக போலீசார் அவர்களை தற்காலிகமாக கைது செய்தனர்.

பின்னர், அவர்கள் ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டு, காவல்துறையுடன் வாக்குவாதத்திற்கு பிறகு விடுவிக்கப்பட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vijay Tamilaga Vettri Kazhagam AjithKumar custodial death protest


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->