விஜயின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ‘விசில் சின்னம்தான்.. தேர்தல் ஆணையம் கிரீன் சிக்னல்..விஜய் செம குஷி! ஆனா ஒரு சிக்கல்?
Vijay Tamil Nadu Victory Party gets a whistle symbol Election Commission green signal Vijay is very happy But is there a problem
நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) கட்சிக்கு, இந்திய தேர்தல் ஆணையம் ‘விசில்’ சின்னத்தை ஒதுக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முதன்முறையாக எதிர்கொள்ளும் தவெகவுக்கு, இந்த சின்னம் அரசியல் ரீதியாக முக்கியமான திருப்பமாக பார்க்கப்படுகிறது.
கடந்த சில வாரங்களுக்கு முன், தேர்தல் சின்னங்கள் (ஒதுக்கீடு மற்றும் ஒதுக்கீடு) ஆணை, 1968-ன் கீழ், தவெக சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்தில் அதிகாரப்பூர்வமாக மனு அளிக்கப்பட்டது. அதில், விசில், ஆட்டோ ரிக்ஷா, மைக்ரோஃபோன் உள்ளிட்ட 10 சின்னங்கள் அடங்கிய பட்டியல் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. இந்த மனுவை கட்சியின் இணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தாக்கல் செய்திருந்தார்.
அரசியல் வட்டாரங்களில், “டெல்லி விஜய்க்கு எதிராக கேம் ஆடும்” என்ற பேச்சு நிலவிய நிலையில், தவெக கேட்ட சின்னமே ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முதலில் விண்ணப்பித்த கட்சிகளுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில், விசில் சின்னம் தவெகவுக்கு வழங்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
‘விசில்’ சின்னத்திற்கு தவெக தலைமை அதிக முக்கியத்துவம் அளித்ததாக கூறப்படுகிறது. விஜய் நடித்த ‘பிகில்’ திரைப்படம் மூலம் விசில் சின்னம் மக்கள் மத்தியில் ஏற்கனவே பரவலாக அறிமுகமாகியுள்ளதுடன், இளைஞர்கள் முதல் வயதானவர்கள் வரை எளிதில் அடையாளம் காணக்கூடிய சின்னமாக உள்ளது. பேரணிகள், பிரச்சார நிகழ்ச்சிகள் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்களில் தெளிவாகத் தெரியும் வகையிலும் இது சாதகமாக இருக்கும் என அரசியல் ஆலோசகர்கள் கூறுகின்றனர்.
மேலும், சுவரில் வரைவதற்கும், களப்பணிகளில் தொண்டர்கள் பயன்படுத்துவதற்கும் விசில் சின்னம் மிகவும் எளிமையானதாக இருப்பதால், பிரச்சார ரீதியாக இது தவெகவுக்கு பலம் சேர்க்கும் என்றும் அவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். சின்னங்கள் என்பது வேட்பாளர் பெயர்களைப் போலவே முக்கியமானது; பார்த்தவுடன் நினைவில் நிற்கும் சின்னம் வாக்குப்பதிவு நாளில் தீர்மானிக்கக்கூடிய பங்காற்றும் என்பதே அரசியல் அனுபவம்.
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்திற்கு ‘விசில்’ சின்னம் ஒதுக்கப்பட்டிருப்பது, விஜயின் அரசியல் பயணத்தில் முதல் பெரிய அதிகாரப்பூர்வ அடையாளமாகவும், 2026 தேர்தலை நோக்கிய பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாகவும் கருதப்படுகிறது.
English Summary
Vijay Tamil Nadu Victory Party gets a whistle symbol Election Commission green signal Vijay is very happy But is there a problem