விசிக மது ஒழிப்பு மாநாட்டில் விஜய் பங்கேற்பு?...இதோ வெளியான தகவல்! - Seithipunal
Seithipunal


சமீபத்தில் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பகள்ளக்குறிச்சிமாவட்டம், உளுந்தூர் பேட்டையில், வரும் அக்டோபர் 2-ம் தேதி, 
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மது-போதை பொருட்கள் ஒழிப்பு மாநாடு நடைபெற உள்ளதாக தெரிவித்தார். மேலும் இந்த மாநாட்டில் மதவாத - சாதியவாத சக்திகளைத் தவிர மற்ற அனைத்துக் கட்சிகளும் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளதாக கூறினார்.

தொடர்ந்து இந்த  மாநாட்டிற்கு அ.தி.மு.க. மற்றும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகத்திற்கு கட்சியின் தலைவர் திருமாவளவன் அழைப்பு விடுத்திருந்த நிலையில், தற்போது,  மாநாட்டில் அ.தி.மு.க. நிச்சயம் பங்கேற்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  

அதேநேரத்தில்   தமிழக வெற்றிக்கழகத்தில் இருந்து நடிகர் விஜய் கலந்து கொள்ளாவிட்டாலும், அவரது கட்சியின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளலாம் அல்லது அவர் மாநாட்டிற்கு வாழ்த்து செய்தி அனுப்பலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த மது ஒழிப்பு மாநாடு அரசியல் கட்சிகளின் கூட்டணியில் ஒருவித மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பாக இருக்கலாம் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vijay participation in Vck alcohol abolition conference here is the information


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->