தனது ஓட்டுநரின் மகனை வேட்பாளராக்கினார் விஜய்!
Vijay Nominates Driver Son for Virugambakkam Constituency
தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய், தனது கார் ஓட்டுநர் ராஜேந்திரனின் மகன் சபரிநாதனை விருகம்பாக்கம் தொகுதி வேட்பாளராக அறிவித்துள்ளார்.
ராஜேந்திரன் கடந்த 30 ஆண்டுகளாக விஜய்யிடம் உதவியாளராகவும் ஓட்டுநராகவும் பணியாற்றி வருகிறார்.
வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில், சபரிநாதன் மேடையில் விஜய்யின் காலில் விழுந்து நெகிழ்ந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனைத் தொடர்ந்து விஜய் அவரையும் அவர் தந்தையையும் அணைத்து ஆறுதல் கூறினார்.
2026 சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் தவெக-வில், விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.
English Summary
Vijay Nominates Driver Son for Virugambakkam Constituency