28 தொகுதிகள்…வேட்பாளர் தேர்வில் தாமதம்..! காங்கிரஸில் தீவிர ஆலோசனை..! - பட்டியல் இன்று...?
28 constituencies Delay candidate selection Serious discussion Congress List today
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான போர்க்களம் தயாராகிவிட்ட நிலையில், அரசியல் கட்சிகளுக்கிடையேயான வியூகங்கள் உச்ச நிலையை எட்டியுள்ளன. வரும் ஏப்ரல் 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள சூழலில், மே 4ஆம் தேதி வெளியாகவுள்ள தேர்தல் முடிவுகள் தமிழகத்தின் அடுத்த ஐந்தாண்டு கால விதியைத் தீர்மானிக்க உள்ளன.திமுக தலைமையிலான கூட்டணியில் கரம் கோர்த்துள்ள காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இருப்பினும், அந்தத் தொகுதிகளில் களமிறங்கும் வேட்பாளர்களை அடையாளம் காண்பதில் நீடிக்கும் இழுபறியால், சத்தியமூர்த்தி பவனில் ஆலோசனைகள் அனல் பறக்கின்றன.
தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் மாநிலப் பொறுப்பாளர் கிரிஷ் சோடன்கர் ஆகியோர், கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் காணொலி வாயிலாக அவசர ஆலோசனையில் ஈடுபட்டு, வேட்பாளர் தேர்வு குறித்த முதற்கட்ட வரைபடத்தைத் தயார் செய்துள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக இன்று மாலை கூடவுள்ள முக்கியக் குழுக் கூட்டத்தில், ஒவ்வொரு தொகுதிக்கும் தலா மூன்று பெயர்கள் அடங்கிய உத்தேசப் பட்டியல் தயாரிக்கப்பட உள்ளது.
இந்தப் பரிந்துரைப் பட்டியல் டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் தலைமையகத்திற்கு அனுப்பப்பட்டு, அங்குள்ள மத்திய தேர்தல் குழுவின் தீவிர பரிசீலனைக்குப் பிறகே இறுதி வேட்பாளர் யார் என்பது உறுதி செய்யப்படவுள்ளது.
மேலும், 28 தொகுதிகளிலும் கை சின்னத்தில் போட்டியிடப் போகும் அந்த 'வெற்றி வீரர்கள்' யார் என்ற எதிர்பார்ப்பு, அக்கட்சியின் தொண்டர்கள் மட்டுமின்றி அரசியல் வட்டாரங்களிலும் பெரும் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது.
English Summary
28 constituencies Delay candidate selection Serious discussion Congress List today