ரகசிய தகவல் ரெய்டு...! 5.5 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலை பறிமுதல்...! - இருவர் கைது
Secret information raid 5point5 kg banned tobacco seized Two arrested
திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் பகுதியில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக காவல்துறையினர் தீவிர ரோந்து மேற்கொண்டனர்.
மேலும், சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையில் செயல்பட்ட காவலர்களுக்கு கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில், மையலப்புரம் அருகே சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த இருவரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.

இந்த சோதனையில், மையலப்புரத்தைச் சேர்ந்த 58 வயதான காரல்மார்க்ஸ் மற்றும் 49 வயதான ஜீவானந்தம் ஆகியோர், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது வெளிச்சத்துக்கு வந்தது.
சுமார் 5.5 கிலோ எடையுள்ள இந்த பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.இதனைத் தொடர்ந்து, சப்-இன்ஸ்பெக்டர் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தார்.
மேலும், பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களுடன் தொடர்புடைய சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
English Summary
Secret information raid 5point5 kg banned tobacco seized Two arrested