விஜய் எடுக்கப்போகும் முக்கிய முடிவு? முன்பே தெரிந்து பின்வாங்கிய டிடிவி, ஓபிஎஸ்! அதிர்ச்சியில் தவெக! நடப்பது என்ன? - Seithipunal
Seithipunal


2026 தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழக அரசியல் களம் வேகமாக மாறி வருகிறது. இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜய் எடுக்க உள்ளதாகக் கூறப்படும் ஒரு முக்கிய முடிவே, அமமுக தலைவர் டிடிவி தினகரன் மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) ஆகியோர் தங்களது அரசியல் பாதையை மாற்றிக் கொள்ள காரணமாக அமைந்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

பாஜக–அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) அமமுக இன்று அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது. இதற்கான அறிவிப்பை டிடிவி தினகரன் தனது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் வெளியிட்டார். கூட்டணியை அறிவித்த உடனே, பாஜக தமிழகத் தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயலை அவர் நேரில் சந்தித்து பேசினார். பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 23-ம் தேதி மதுராந்தகத்தில் பங்கேற்க உள்ள பொதுக்கூட்டத்திற்கு முன்பாகவே கூட்டணியை இறுதி செய்ய வேண்டும் என்ற பாஜக மேலிடத்தின் அழுத்தமே இந்த வேகமான நகர்வுக்கு காரணம் என கூறப்படுகிறது.

இதற்கிடையே, ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலும் அரசியல் நிலைமை வேகமாக மாறி வருகிறது. ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து, மகனுடன் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இதேபோல் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், முன்னாள் எம்.எல்.ஏ குன்னம் ராமச்சந்திரன் உள்ளிட்டோரும் திமுகவில் இணையத் தயாராகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் ஓபிஎஸ் தனித்து நிற்க முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், அவர் பாஜக–அதிமுக கூட்டணிக்கோ அல்லது திமுகவுக்கோ செல்ல நேரிடலாம் என்றும் அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன.

இந்த இரண்டு தரப்புகளின் திடீர் அரசியல் நகர்வுகளுக்கும் பின்னால், விஜய் எடுக்க உள்ள முடிவே முக்கிய காரணம் என கூறப்படுகிறது. தவெக சார்பாக விஜய் அரசியலில் இருந்து முழுமையாக விலகலாம் அல்லது “தவெக போட்டியிடலாம்; நான் நேரடியாக போட்டியிட வேண்டாம்” என்ற வகையிலான முடிவை எடுத்துவிட்டார் என்ற தகவல் டெல்லி அரசியல் வட்டாரங்கள் வழியாக பரவியதாக சொல்லப்படுகிறது. இந்த முடிவை முன்கூட்டியே அறிந்தே, முதலில் விஜயுடன் இணைவதில் ஆர்வம் காட்டிய டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ், பின்னர் பின்வாங்கி தங்கள் சொந்த அரசியல் பாதுகாப்பை தேடி நகர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

கடந்த சில வாரங்களாக விஜயின் அரசியல் செயல்பாடுகள் கணிசமாக குறைந்துள்ளதும் இந்த வதந்திகளுக்கு வலு சேர்க்கிறது. ஈரோடு நிகழ்ச்சிக்குப் பிறகு, கிறிஸ்துமஸ் விழாவில் மட்டும் கலந்து கொண்ட அவர், அதன்பின்னர் எந்த அரசியல் நிகழ்விலும் பங்கேற்கவில்லை. தவெக சார்பாக நடத்த திட்டமிடப்பட்டிருந்த பொங்கல் விழாவும் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. விஜய் மட்டுமல்லாமல், கட்சியின் முக்கிய நிர்வாகிகளான ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோரும் முழுமையாக மௌனமாக உள்ளனர். கடந்த நான்கு வாரங்களாக தவெக கட்சி “சைலன்ட் மோடு” நிலைக்கு சென்றது போலவே காணப்படுகிறது.

இதற்கிடையே, சிபிஐ விசாரணை மற்றும் ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடர்பான வழக்குகள் ஒரே நேரத்தில் நடைபெற்று வரும் நிலையில், விஜய் திட்டமிட்ட அமைதியை கடைப்பிடிப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த சூழல்களையெல்லாம் ஒன்றாகப் பார்க்கும்போது, விஜய் அரசியலில் இருந்து தற்காலிகமாகவோ அல்லது முழுமையாகவோ விலகும் முடிவை எடுத்திருக்கலாம் என்றே அரசியல் வட்டாரங்கள் கணிக்கின்றன.

இந்த முடிவை முன்கூட்டியே அறிந்ததால்தான், விஜயை சீண்டாமல், அவருடன் நேரடியாக இணைவதைத் தவிர்த்து, டிடிவி தினகரனும் ஓ.பன்னீர்செல்வமும் தங்களுக்கான புதிய அரசியல் பாதையைத் தேர்வு செய்துள்ளனர் என்றே தற்போது தமிழக அரசியல் களத்தில் பரவலாக பேசப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vijay next big decision TTV who knew in advance and backed out OPS Thaveka is shocked What going on


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->