விஜய் வருகை திமுகக்கு அதிர்ச்சி அலை… 200 தொகுதிகளில் என்.டி.ஏ வெற்றி உறுதி - தினகரன் திடீர் அரசியல் கணிப்பு
Vijay arrival sends shockwaves through DMK NDA victory 200 constituencies certain Dinakaran sudden political prediction
கும்பகோணத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், வரவிருக்கும் சட்டசபை தேர்தல் அரசியல் சூழல் குறித்து பல்வேறு பரபரப்பான கருத்துகளை வெளிப்படுத்தினார்.நடிகர் விஜயின் அரசியல் வருகை திமுக கூட்டணிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் என அவர் கூறினார்.

“விஜய் களமிறங்குவது திமுக வாக்கு வங்கியை சிதறடிக்கும். அதே நேரத்தில் அதிமுக தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணிக்கு இது கூடுதல் பலமாக அமையும்” என அவர் வலியுறுத்தினார்.தமிழகம் இன்று போதைப்பொருள் பரவலின் மையமாக மாறிவிட்டதாகவும், சர்வதேச கடத்தல் வலையமைப்புகளின் தளமாக மாநிலம் பயன்படுத்தப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
“பள்ளி மாணவர்களிடமே போதைப்பொருள் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது ஆட்சியின் நிர்வாக தோல்வியை வெளிக்காட்டுகிறது” என்றார்.கடந்த தேர்தலில் அ.ம.மு.க. தனித்து போட்டியிட்டது திமுகவுக்கு சாதகமாக அமைந்ததாக குறிப்பிட்ட அவர், “இந்த முறை அதிமுக தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணியுடன் நாங்கள் இணைந்துள்ளதால், அந்த வாய்ப்பு திமுகவுக்கு கிடைக்காது” எனத் தெரிவித்தார்.
வரும் தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று ‘அம்மா ஆட்சி’ மீண்டும் அமையும் என அவர் நம்பிக்கை வெளியிட்டார்.மேலும், சில கட்சிகள் ‘திடீர் சாம்பார், ஃபாஸ்ட் ஃபுட்’ போல தேர்தல் நேரத்தில் மட்டுமே தோன்றி, கோடிக்கணக்கில் பணம் செலவழித்து வேட்பாளர்களை தேடும் அரசியல் நாடகத்தில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் விமர்சித்தார்.
தி.மு.க. கூட்டணி வெளிப்படையாக ஒற்றுமையை காட்டினாலும், உள்ளுக்குள் கடும் முரண்பாடுகள் நிலவுகின்றன என்று கூறிய தினகரன், “கொள்கை ஒன்றாக இருந்தால் தனித்தனி கட்சிகள் ஏன்? காங்கிரஸுக்கு எதிராக உருவான திமுக இன்று அதே காங்கிரஸுடன் கைகோர்த்துள்ளது. இது கொள்கை அரசியல் அல்ல, வசதி அரசியல்” என தாக்கம் மிக்க கருத்து பதிவு செய்தார்.
English Summary
Vijay arrival sends shockwaves through DMK NDA victory 200 constituencies certain Dinakaran sudden political prediction