தமிழ் அன்னைக்குக் கிடைத்த வெற்றி...! தமிழ்த்தாய் வாழ்த்து குறித்த அரசின் வரலாற்று முடிவுக்கு கமல்ஹாசன் பாராட்டு...!
victory Tamil Mother Kamal Haasan praises government historic decision Tamil Mother Day
தமிழக சட்டசபையில் நேற்று தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த அரசினர் தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் அரசு சார்ந்த பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகள் தொடங்குவதற்கு முன்பாக தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் முதலில் பாடப்பட வேண்டும் என்பதே இந்தத் தீர்மானத்தின் முக்கிய அம்சமாகும்.

இந்த தீர்மானத்தை சட்டசபையில் முதலமைச்சர் விஜய் முன்மொழிந்தார். தொடர்ந்து நடைபெற்ற விவாதத்துக்கு பிறகு, தீர்மானம் உறுப்பினர்களின் ஒருமித்த ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில், அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் என்ற தீர்மானத்திற்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கமல்ஹாசன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது,"அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதன்மையாக பாடப்பட வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
இந்த முடிவு வரவேற்கத்தக்கது.மாநிலத்தின் உரிமைகளையும், தனித்துவத்தையும் விட்டுக்கொடுக்காத இந்த அணுகுமுறை தொடர்ந்து நிலைத்திருக்க வேண்டும்.இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
English Summary
victory Tamil Mother Kamal Haasan praises government historic decision Tamil Mother Day