தனித்து போட்டி, வேட்பாளரை அறிவித்து களத்தில் இறங்கிய பிரபல கழக கட்சி! - Seithipunal
Seithipunal


ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் இளங்கோவன் போட்டியிடுகிறார்.

தனித்து களமிறங்கும் தேசிய முற்போக்கு திராவிட கழகம் தனது வேட்பாளர் அறிவித்து, பிரச்சாரத்தை  தொடங்கியுள்ளது. 

நாம் தமிழர் கட்சியும் பெண் வேட்ப்பாளரை களமிறக்கி தனித்து போட்டியிட உள்ளது. பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தனது வேட்பாளரை அறிவிக்க தயாராகி வருகிறது. அதில் பல சிக்கல்கள் உருவாகியுள்ளன. 

இந்நிலையில், வெள்ளாளர் முன்னேற்ற கழகம் தலைமை கழகம் தனித்து போட்டியிட உள்ளத்தக்க அறிவித்துள்ளது.

இதுகுறித்த அக்கட்சியின் அறிவிப்பில், "வெள்ளாளர் முன்னேற்ற கழகம் ஆட்சி மன்ற குழு பரிசீலித்து வருகிற 27.02.2023-ம் தேதியன்று நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் வெள்ளாளர் முன்னேற்ற கழகத்தின் சார்பில் மாநில கழக நிர்வாகிகள் பரிந்துரையின் பேரிலும் தலைவர் திரு.அண்ணா சரவணன் அவர்களின் ஒப்புதலின் பேரிலும் கழக இளைஞரனி தலைவர் திரு.M.N.B.ராஜா வேளாளர் அவர்கள் அதிகார பூர்வ வேட்பாளராக நிறுத்தப்படுகிறார் என்பதை தெரிவித்து கொள்கிறோம்." என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

vellalar munnetra kazhakam announce


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->