அப்போ ஒரு பேச்சு... இப்போ ஒரு பேச்சு... கம்யூனிஸ்டுகளுக்கு ரத்தின கம்பளம் மூலம் வஞ்சக வலை...!- சண்முகம்
talk then talk now A web of deceit through gemstone carpet communists Shanmugam
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் ''சண்முகம்'' அவர்கள் தனது எக்ஸ் தளபக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளதாவது,"எடப்பாடி பழனிசாமி காலையில் ஒரு பேச்சு அதற்கு நேர் மாறாக மாலையில் ஒரு பேச்சு.

நாடாளுமன்ற தேர்தலில் ஒரு பேச்சு அதற்கு நேர்மாறாக இப்போது பிஜேபியோடு கூட்டணி.போன வாரம் கம்யூனிஸ்ட்களையே காணோம் என்றார், இந்த வாரம் அழைக்கிறார்.
கம்யூனிஸ்டுகளுக்கு அவர் விரிப்பது ரத்தின கம்பளம் அல்ல. வஞ்சக வலை என்பதை நாங்கள் அறிந்தே வைத்துள்ளோம்.
ஆர்எஸ்எஸ் எனும் புதை குழிக்குள் விழுந்து வெளியேற முடியாமல் சிக்கிக் கொண்டிருப்பது அதிமுக தான்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
talk then talk now A web of deceit through gemstone carpet communists Shanmugam