ஸ்டாலின் என்னை கட்டாயப்படுத்தி இப்படி செய்து விட்டார்.! வைகோ பரபரப்பு பேட்டி.!! - Seithipunal
Seithipunal


இன்று சென்னை விமான நிலையத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளருக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியவை, 23 ஆண்டுகளுக்குப் பிறகு பாராளுமன்ற மேல்சபை எம்பியாக பதவி ஏற்கப்போகிறேன். 

நான் முதல் முறையாக எம்பியான போது பாராளுமன்றத்தில் முரசொலி மாறன் என்னை ஆதரித்தார் .அதன் பிறகு  மூன்றாம் கலைஞர் என்னை எம்பி ஆக்கினார்.தற்போது திமுக தலைவர் மு க ஸ்டாலின் என்னை வலுக்கட்டாயமாக பாராளுமன்ற மேல்சபை எம்பி ஆக்கி, டெல்லிக்கு அனுப்பி வைக்கிறார் என்று கூறினார். 

தற்போது பாராளுமன்றத்தில் உள்ள எம்பிகளுடன் எனக்கு பழக்கம் இல்லை. தமிழகத்தின் உரிமையை காப்பதற்கு குரல் கொடுப்பேன். தமிழ்நாட்டின் மதசார்பின்மையை சீர்குலைக்கும் நோக்கில் மத்திய அரசு செயல்படுகிறது. 22 மொழிகளையும் ஆட்சி மொழியாக்கும் வரையில் ஆங்கிலம் தொடர்பு மொழியாக இருக்க வேண்டும் என்று ராஜாஜி கூறினார். தமிழ் மொழியை இந்தியாவின் ஆட்சி மொழியாக வேண்டும் என்று வைகோ கூறினார்.
 

English Summary

Vaiko says about MK Stalin for MP seat


கருத்துக் கணிப்பு

வேலூர் மாவட்டத்தினை மூன்றாக பிரிப்பதால் மக்களின் வாழ்வாதாரம்?
கருத்துக் கணிப்பு

வேலூர் மாவட்டத்தினை மூன்றாக பிரிப்பதால் மக்களின் வாழ்வாதாரம்?
Seithipunal