மாநில உரிமைக் கொடியை உயர்த்திப் பிடிக்கும் ஆளுநர் உரை.. வைகோ.!! - Seithipunal
Seithipunal


தமிழகச் சட்டமன்றத்தின் 16 ஆவது பேரவையின் 2ஆவது கூட்டத்தில், ஆளுநர் ஆர்.என்.இரவி ஆற்றிய உரையில் பல வரவேற்கத்தக்க அம்சங்கள் இடம்பெற்று இருக்கின்றன.

ஆங்கில நாளிதழ் நடத்திய ஆய்வில், சிறந்த முதல்வராக மு.க.ஸ்டாலின் அவர்கள் தேர்வாகி உள்ளார் என்பதற்கும், வடகிழக்குப் பருவ மழை காரணமாக பெருமளவில் பாதிக்கப்பட்ட சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் இயற்கைச் சீற்றத்தைச் சிறப்பாகக் கையாண்டதற்கும், முதல்வருக்கு ஆளுநர் பாராட்டுத் தெரிவித்து இருக்கின்றார். கொரோனா இரண்டாவது அலையைக் கட்டுப்படுத்தியதையும் பாராட்டி இருக்கின்றார். 

தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் ஒமைக்ரான் கண்டறியப்பட்டுள்ள நிலையில், நாட்டிலேயே ஒமைக்ரான் பரிசோதனை நடத்தும் ஆய்வகம் முதலில் அமைந்தது தமிழ்நாட்டில்தான் என்பதை ஆளுநர் சுட்டிக்காட்டி இருக்கின்றார். 

அதைப்போல, முதல்வரின் முயற்சியால் தடுப்பு ஊசி செலுத்துவது மக்கள் இயக்கமாக மாறி உள்ளது; கொரோனா தொற்றால் உயிர் இழந்தவர்களுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தமிழ்நாடு அரசு நிதி உதவி அளித்துள்ளது; அரசின் இலவசப் பேருந்துகளில் கடந்த நான்கு மாதத்தில் 61 விழுக்காடு அளவிற்கு மகளிர் பயணம் செய்துள்ளனர்; மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு நடப்பு ஆண்டில் ரூபாய் 20 ஆயிரம் கோடி கடன் வழங்கப்படும்;

அரசு பள்ளிகளின் கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும்; உயர்கல்வியில் தரமான பாடத்திட்டத்தைச் சேர்த்து, மாணவர்களின் முன்னேற்றத்திற்கு உதவும் வகையில் சட்டத்திட்டத்தை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்; நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகள் வேண்டாம் என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது; எங்கும் தமிழ்; எதிலும் தமிழ் என்பதை உறுதிப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது; 

கொள்கைப்படி அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், கடைகளில் தமிழ் பயன்பாட்டை அரசு உறுதி செய்யும் என்பது போன்ற அறிவிப்புகள் உவகை தருகின்றது. மருத்துவக் காப்பீடு திட்டத்திற்கான வருமான வரி வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை ஒரு இலட்சம் கோடி டாலராக உயர்த்த அரசு இலக்கு வைத்து உள்ளது, உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் 1.29 இலட்சம் மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது.

குடிசைகள் இல்லா தமிழகத்தை ஏற்படுத்துவதே முதல்வரின் கனவு, பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்க்கும் வகையில், மீண்டும் மஞ்சள் பை திட்டம் அறிமுகம், அரசு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடுவது கட்டாயம், கோவில் நிலங்கள் பாதுகாப்பு, பெரிய கோவில்களில் புத்தக நிலையங்கள் திறத்தல், நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு, சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் பல்வேறு கட்டமைப்புகள் மேற்கொள்ள ரூ.500 கோடி ஒதுக்கீடு போன்ற அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை.

மேகேதாட்டுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு ஒன்றிய அரசு ஒருபோதும் அனுமதிக்க அளிக்கக்கூடாது; முல்லைப் பெரியாறு அணையில் முழு கொள்ளளவு நீர் தேக்க நடவடிக்கை எடுக்கப்படும்; இரு மொழிக் கொள்கையை தமிழக அரசு தொடர்ந்து கடைப்பிடிக்கும்; முதல் மொழியாக தமிழும், இரண்டாவது மொழியாக ஆங்கிலமும் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் போன்ற அறிவிப்புகள் மூலம், தி.மு.க. அரசு தமிழ்நாட்டின் மாநில உரிமைக் கொடியை பட்டொளி வீசிப் பறக்கச் செய்து இருக்கின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vaiko says about governor rn ravi speech


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->