இனி இந்த மாணவ, மாணவிகளுக்கு அனுமதி இல்லை - தடை விதித்த அமைச்சர்.!
Vaccination in Chennai College
தென்னாப்பிரிக்காவில் உருமாறிய கொரோன, ஒமிக்கிரான் வைரஸ் தற்போது வேகமாக உலக நாடுகளில் பரவி வருகிறது. இந்தியாவில் மகாராஷ்டிரா, ராஜஸ்தான், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இந்த புதிய வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இந்த ஒமிக்கிரான் வைரஸ் வராமல் தடுப்பதற்கு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு படியாக தமிழத்தில் உள்ள அரசு கல்லூரிகளில் மறு உத்தரவு வரும் வரை வரும் வரை கலை நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது என்று, மக்கள் நலவாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் கல்லூரி விடுதிகளில் மாணவர்கள் கூட்டமாக உணவு அருந்துவதற்கும் தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே, சற்றுமுன் அமைச்சர் மா சுப்பிரமணியன் வெளியிட்ட அறிவிப்பில், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டால் மட்டுமே கல்லூரிகளில் மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் சென்னையிலுள்ள கல்லூரிகளில் நாளை சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
Vaccination in Chennai College