உதயநிதி வெளியிட்ட அறிவிப்பு.? உற்சாகத்தில் உடன்பிறப்புகள்.. சோகத்தில் ரசிகர்கள்.!
uthayanithi may stop acting
திமுகவின் இளைஞரணி செயலாளராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவாக இருக்கிறார். இவர் அரசியலில் படு பிசியாக இருந்து வருகிறார். சட்டசபைக் கூட்டங்களில் மற்றும் திமுக நிகழ்வுகளிலும் தவறாமல் கலந்து கொள்கிறார்.
உதயநிதி ஸ்டாலின் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்று மூத்த அமைச்சர்கள் பலரும் விருப்பத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அரசியலில் பிஸியாக இருந்தாலும் சினிமாவிலும் உதயநிதி நடித்து வருகிறார். இவரது நெஞ்சுக்கு நீதி திரைப்படம் வரும் மே 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றது.
அத்துடன் மாரி செல்வராஜ் இயக்கத்தில் மன்னன் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். ஏ. ஆர். ரகுமான் இசையமைக்கும் இந்தப் படத்தில் வடிவேலு நடிக்க கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிக்கிறார்.
இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் மாமன்னன் திரைப்படம் தான் தனது கடைசி படமாக இருக்கும் என்று உதயநிதி கூறியுள்ளதாகவும், அரசியலில் அவர் செய்ய வேண்டிய பணிகள் நிறைய இருப்பதால் சினிமாவை ஒதுக்கப் போவதாகவும் அவரே கூறியதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது உதயநிதி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், திமுக உடன் பிறப்புகள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனராம்.
English Summary
uthayanithi may stop acting