பாஜக எம்.எல்.ஏ பாலியல் வழக்கில் நேற்று தொடங்கிய கவுண்ட் டவுன்!!   - Seithipunal
Seithipunal


உத்தரபிரதேச மாநிலம், உன்னாவ் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரை பாஜக சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சாகர் மீது பாலியல் புகார் அளித்திருந்தார். 

அந்த பெண் அளித்த புகாரில், பணி தொடர்பாக விசாரிக்க குல்தீப்பின் உதவி தேடி அவரது வீட்டிற்கு அப்பெண் சென்றுள்ளார். அங்கு, எம்.எல்.ஏ குல்தீப் அப்பெண்ணை  பாலியல் பலாத்காரம் செய்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. சமீபத்தில் புகார் தந்த அந்த பெண், தனது தாய், வழக்கறிஞர், மற்றும் உறவினர் ஒருவருடன் சேர்ந்து காரில் ரேபரேலி சென்றுக் கொண்டிருந்தார். அப்போது அவர்கள் சென்ற கார் மீது லாரி மோதியது. 

இந்தவிபத்தில், பாலியல் புகார் தந்த பெண், அவரது வழக்கறிஞர் ஆகிய இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். இதையடுத்து இந்த விவகாரம் நாடு முழுவதும் பேரும் சர்ச்சையானது இதனையடுத்து குல்தீப் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டார்.

இதையடுத்து, உன்னாவ் பெண் பாலியல் புகார் தொடர்பான அனைத்து வழக்குகளையும் உத்திர பிரதேச நீதிமன்றலிருந்து டெல்லி சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றியது. பின்னர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அப்பெண் மற்றும் அவரது வழக்கறிஞர் ஆகியோர் விமானம் மூலம்  டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றபட்டனர்.

இந்நிலையில், இந்த வழக்கை விசாரிக்க டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தற்காலிக நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது. பாஜக எம்.எல்.ஏ. குல்தீப்பின் செங்கார் , அவருடைய கூட்டாளியும் அந்த தற்காலிக நீதிமன்றதில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அப்போது, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண்ணிடம்  ரகசிய விசாரணை நடத்திய நீதிபதி தர்மேஷ் சர்மா. அப்பெண்ணின் வாக்குமூலத்தை பதிவு செய்து கொண்டார்.


அங்கு நீதிபதி வருகை தந்து இன்று விசாரிக்க உள்ளார். இதில் அப்பெண்ணின் வாக்கு மூலம் பதிவு செய்யப்பட உள்ளது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட குல்தீப் செங்காரும் அங்கு கொண்டுவரப்பட உள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

unnav case women confessions


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->