இன்று உலக தாய் மொழி தினம்., உருது மொழி திணிப்பை வீழ்த்த பறிபோன 4 உயிர்களின் நினைவு நாள்.! - Seithipunal
Seithipunal


இன்று உலகத் தாய்மொழி தினம். தமிழ் தாய் பிள்ளைகளாய் இன்று நாம் நம் தாய் மொழி தமிழை போற்றி வணங்குவோம். 

உலகம் முழுவதும் ஆண்டு தோறும் பிப்ரவரி 21 ஆம் தேதி தாய்மொழி தினமாகக் கடைபிடிக்கப் படுகிறது. நாடு, மதம், சாதிகளை கடந்து தமிழராகிய நம் அனைவரையும் ஒன்றிணைப்பது தமிழ் மொழி ஒன்று தான். இது பல்லாயிரமாண்டு அழியாத நம் பண்பாட்டின் அடையாளம்.

1948 ஆம் ஆண்டின் அப்போதைய பாகிஸ்தான் அரசு உருது மொழியை பாகிஸ்தானின் ஒரே தேசிய மொழியாக அறிவித்தது. இதற்கு கிழக்கு பாகிஸ்தான் மக்களால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. தாய் மொழியான வங்காள மொழியை குறைந்தபட்சம் தேசிய மொழிகளில் ஒன்றாக அறிவிக்க வேண்டுமென்று, தாக்கா பல்கலைக்கழக மாணவர்கள் பொது மக்களின் ஆதரவுடன் போராட்டம் செய்தனர்.

அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் சலாம், பர்கட், ரபீக், ஜபார் மற்றும் ஷபியூர் ஆகிய மாணவர்கள் கொல்லப்பட்டனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். தாய்மொழிக்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்த இந்த சம்பவம் வரலாற்றில் பதியப்பட்ட ஒன்று.

கடந்த 1952 இல் இந்த நாளன்று அன்றைய கிழக்கு பாகிஸ்தான் தலைநகர் தாக்காவில், வங்காள மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்கக் கோரி போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தின் போது உயிர்நீத்த நான்கு மாணவர்களின் நினைவாக இந்நாள் உலகளாவிய முறையில் தாய் மொழிக்கு சிறப்பு நாளாகக் கொண்டாடப்படுகிறது. 

வங்காள தேச அரசின் முயற்சி மற்றும் பல்வேறு நாடுகளின் ஆதரவோடு, ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் (யுனெசுக்கோ) அமைப்பின் 1999, பிப்ரவரி 21 உலக தாய் மொழி தினமாக அறிவிக்கப்பட்டது. 

இதனையடுத்து 2000 ஆம் ஆண்டு முதல் இந்த நாளானது உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இன்று 21 .02 .2021 உலக தாய் மொழி தினம் கொண்டப்படுகிறது. வங்காளதேசத்தில் உலக தாய்மொழி தினம் தேசிய விடுமுறை தினமாகும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ULAKA THAI MOZHI THINAM


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மூன்றாவது ஒரு கூட்டணி உருவாகினால்., யாருக்கு பாதிப்பு.,?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மூன்றாவது ஒரு கூட்டணி உருவாகினால்., யாருக்கு பாதிப்பு.,?
Seithipunal