அதிகாரத்தை இழந்தும் அடங்காத உதயநிதி...? - வானதி சீனிவாசன் பரபரப்பு குற்றச்சாட்டு...! - Seithipunal
Seithipunal


பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது,"தமிழ்நாடு சட்டமன்றத்தில் புதிய சபாநாயகராக தேர்வு செய்யப்பட்ட ஜே.சி.டி. பிரபாகருக்கு வாழ்த்து தெரிவித்து உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “மக்களைப் பிளவுபடுத்தும் சனாதன தர்மம், அதாவது இந்து மதக் கொள்கைகள் அகற்றப்பட வேண்டும்” என்று கருத்து வெளியிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சனாதன தர்மத்திற்கு எதிரான நிலைப்பாடே திமுகவின் அடிப்படை சிந்தனை என்றால், அது ஏன் தேர்தல் அறிக்கையில் வெளிப்படையாக இடம்பெறவில்லை? தேர்தல் பரப்புரையின் போது, இந்து மதத்திற்கு எதிரான கருத்துகளை ஏன் உதயநிதி ஸ்டாலின் முன்வைக்கவில்லை? என்ற கேள்வியையும் வானதி சீனிவாசன் எழுப்பியுள்ளார்.

தேர்தல் பிரசாரத்தின் இறுதிக்கட்டத்தில், “நாங்கள் இந்துக்களுக்கு எதிரானவர்கள் அல்ல” என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியிருந்தார். ஆனால் ஆட்சிக்காலம் முழுவதும் இந்து சமய நம்பிக்கைகளை விமர்சிக்கும் போக்கை திமுக தொடர்ச்சியாக கடைபிடித்ததாகவும், அதனால் இறுதிநேரத்தில் கூறப்பட்ட விளக்கத்தை மக்கள் ஏற்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்த பிறகு, சிறுபான்மையினரின் ஆதரவு இனி திமுகவுக்கு குறையும் என அரசியல் வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகிறது.

அந்த ஆதரவு இன்றி திமுகவின் அரசியல் பலம் வீழ்ச்சியடையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.அதனால்தான், “நாங்கள் இந்து மதத்திற்கு எதிரான நிலைப்பாட்டிலேயே உள்ளோம்” என்பதை எதிர்க்கட்சித் தலைவரான உடனேயே உதயநிதி ஸ்டாலின் தனது முதல் உரையிலேயே வெளிப்படுத்தியுள்ளதாகவும், இந்த இரட்டை முக அரசியலை மக்கள் தெளிவாக புரிந்துகொண்டு திமுகவை ஆட்சியிலிருந்து அகற்றியுள்ளதாகவும் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

மேலும், இன்னும் அவர்கள் தங்களின் அணுகுமுறையை மாற்றிக் கொள்ளவில்லை என்றும், அதற்கான பதிலை மக்கள் மீண்டும் ஜனநாயகத்தின் மூலம் வழங்கும் காலம் விரைவில் வரும் என்றும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Udhayanidhi who indomitable despite losing power Vanathi Srinivasan sensational accusation


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->