உயிர் நண்பனின் கனவை தவிடுபொடியாக்கிய உதயநிதி ஸ்டாலின்.!! - Seithipunal
Seithipunal


கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. முதல் முறையாக முக ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்றார். அதன் பிறகு அமைச்சர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர். அமைச்சர்கள் பட்டியல் வெளியானபோது முதலமைச்சர் மு க ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் பெயர் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அமைச்சர் பட்டியலில் உதயநிதி ஸ்டாலின் பெயர் இடம்பெறவில்லை. 

முதல் முறையாக ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள ஸ்டாலின் எவ்வித விமர்சனங்களும் தன் மீது வந்து விடக்கூடாது என்பதில் கவனமாக உள்ளார். வாரிசு அரசியல் விமர்சனம் எழுந்து விடும் என்பதை காரணம் காட்டி உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்க வில்லை. 

இதையடுத்து, ஆட்சி அமைத்து ஆறு மாதங்கள் ஆன நிலையில் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டுமென மீண்டும் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. ஸ்டாலின் வீட்டுக்குள் மட்டும் பேசப்பட்டு வந்த விஷயம் தற்போது பொதுவெளியில் பேசப்பட்டு வருகிறது. முதன்முறையாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சரும், உதயநிதி ஸ்டாலின் நண்பருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி, உதயநிதி ஸ்டாலினின் தமிழ்நாட்டின் அமைச்சராக வர வேண்டும். இது எனது விருப்பம் அல்ல. சேப்பாக்கம் தொகுதி மக்கள் உள்ளிட்ட பலரது விருப்பம் என தெரிவித்தார். அதன் பிறகு பலரும் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். 

இந்நிலையில், கோவை மாவட்டம் காளப்பட்டியில் திமுக உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் இன்று நடைபெற்றது. இந்த முகாமை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கூட்டத்தில் பேசிய மூத்த அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் பதவியை ஏற்க வேண்டும் என வலியுறுத்தினர். 

இதையடுத்து, பேசி உதயநிதி ஸ்டாலின், அமைச்சர், துணை அமைச்சர் பொறுப்புக்களுக்கு என்னை நியமிக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி, அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் பேசினர். அமைச்சர் பதவி போன்ற எந்த பதிவிலும் எனக்கு ஆசை இல்லை. எந்த பொறுப்புகளுக்கும் ஆசைப்படாதவர் நான். சட்டமன்ற தேர்தலில் கோவை மக்கள் எங்களை ஏமாற்றி விட்டனர். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் ஏமாற்றி விடாதீர்கள் என உதயநிதி ஸ்டாலின் கோவை மக்களுக்கு கோரிக்கை விடுத்தார். இதன் மூலம் உதயநிதி ஸ்டாலின் நண்பர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் கனவு தவிடுபொடியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

udhayanidhi stalin says no minister post


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->