''Childline பணியாளர்களின் ஊதியப் பிரச்சினையைத் தீர்த்து வைக்க வேண்டும்'; தமிழக அரசுக்கு உதயநிதி கோரிக்கை..! - Seithipunal
Seithipunal


''குழந்தைகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் Childline (1098) பணியாளர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இவர்களின் ஊதியப் பிரச்சினையைத் தீர்த்து வைக்க வேண்டும்'' என தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

''குழந்தைகள் நலனுக்கான Childline (1098) அமைப்பின் பணியாளர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்துள்ளது.

ஊதியம் இல்லாத நிலையில் சைல்டுலைன் பணியாளர்கள் சிலர் தங்கள் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க இரவு நேரங்களில் மாற்று வேலைகளுக்கு செல்லக்கூடிய அவலம் ஏற்பட்டிருப்பதாகக் கூறுகின்றனர். இன்னும் சிலர் இந்தப் பணியே வேண்டாம் என விலகும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர்.

குழந்தைகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் சைல்டு லைன் அமைப்பு எவ்வளவு முக்கியமோ, அதே அளவு அதில் பணிபுரிவோரின் நலனும் முக்கியம். எனவே சைல்டு லைன் பணியாளர்களின் ஊதியப் பிரச்சினையைத் தீர்த்து வைத்து, அவர்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க அரசு முன்வர வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Udhayanidhi requests the Tamil Nadu government to resolve the salary issue of Child Line workers


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->