''இந்த டம்மி ஆட்சியில் பச்சை குழந்தைகளுக்கு கூட பாதுகாப்பில்லை''; தவெக அரசை விமர்சித்துள்ள உதயநிதி..!
Udhayanidhi has criticized the TVK administration stating that even children are not safe under this dummy government
''ராணிப்பேட்டையில் கூட இதே போல ஒரு குழந்தை காணாமல் போய் சுமார் ஒரு மாதம் ஆகியும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த டம்மி ஆட்சியில் பச்சை குழந்தைகளுக்கு கூட பாதுகாப்பில்லை.''என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது;
''செஞ்சி அருகே 7 வயது சிறுமி காணாமல் போய் இன்றோடு 11 நாட்கள் ஆகியும், அச்சிறுமியை கண்டுபிடிக்க முடியாமல் இந்த அரசு திணறிக்கொண்டு இருப்பது கடும் கண்டனத்துக்குரியது.
குழந்தையைக் கண்டுபிடிக்காத அரசையும் - காவல்துறையையும் கண்டித்து திமுக சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணன் தரணிவேந்தன் தலைமையில் செஞ்சி ஆலம்பூண்டியில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டையில் கூட இதே போல ஒரு குழந்தை காணாமல் போய் சுமார் ஒரு மாதம் ஆகியும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த டம்மி ஆட்சியில் பச்சை குழந்தைகளுக்கு கூட பாதுகாப்பில்லை என்ற நிலையில் தான் தமிழகம் இருக்கிறது.
முதல்வர் விஜய் தன் ரீல்ஸ் மோகத்தைத் தள்ளி வைத்துவிட்டு, பிள்ளையை தொலைத்துத் தவிக்கும் அந்தக்குடும்பத்தின் வலியை உணர்ந்து, காணாமல் போன குழந்தையை உடனே கண்டறிய ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.'' என்று உதயநிதி பதிவிட்டுள்ளார்.
English Summary
Udhayanidhi has criticized the TVK administration stating that even children are not safe under this dummy government