எங்களை நம்பிய மக்கள் அனைவருக்கும் மீண்டும் நன்றி - முதலமைச்சர் விஜய் உருக்கம்! - Seithipunal
Seithipunal


தமிழக வெற்றிக்கழகத் தலைவரும், முதலமைச்சருமான விஜய் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "மனசாட்சி உள்ள மக்களாட்சி அமைத்துள்ள மக்கள் அரசின் மீதான நம்பிக்கை கோரும் தீர்மானம், இன்று சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்டது.

மக்கள் நம்பிக்கை மூலம் அமைக்கப்பட்ட நமது அரசுக்கு ஆதரவு அளிக்கப்பட்டும் வாக்களிக்கப்பட்டும் நம்பிக்கைத் தீர்மானம் வெற்றி பெற்றுள்ளது.

இந்த வெற்றிக்குக் காரணமான, நம்மை ஆதரிக்கும் மதிப்பிற்குரிய அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும், அக்கட்சிகளைச் சேர்ந்த மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியறிதலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

அதே வேளையில், என்றும் நம்முடன் நிற்கும் நம் கழகச் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் நமது அன்பினைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

இந்த வேளையில், தேர்தலில் நம்மை நம்பிய மக்கள் அனைவருக்கும் மீண்டும் நன்றியைத் தெரிவிக்க வேண்டியது நமது கடமை. தமிழக மக்கள் அனைவருக்கும் நன்றி" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TVK Vijay thanks to tn people


கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..




Seithipunal
--> -->