நீதி வெல்லும்..! உச்சநீதிமன்ற உத்தரவை வரவேற்ற தவெக தலைவர் விஜய்! - Seithipunal
Seithipunal


கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் சென்னை ஐகோர்ட்டு தனி நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்க உத்தரவிட்டதை எதிர்த்து, தமிழக வெற்றிக்கழகம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவின் விசாரணை நீதிபதிகள் மகேஸ்வரி, அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்றது. அப்போது தமிழக போலீசால் மட்டுமே விசாரணை நடைபெறுவது நியாயமல்ல என்று தவெக தரப்பு வாதிட்டது. மாநில போலீசுக்கு தங்களுக்குப் நம்பிக்கை இல்லை என்பதால், ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் தனி விசாரணைக் குழு அமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.

வாதங்களைக் கேட்ட உச்சநீதிமன்றம், கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது. இது வழக்கில் முக்கியமான திருப்பமாக பார்க்கப்படுகிறது.

மேலும், விசாரணையை கண்காணிப்பதற்காக ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்படும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் வழக்கின் நடத்தை முழுமையாக வெளிப்படையாக இருக்கும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.

இந்த தீர்ப்புக்கு தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் வரவேற்பு தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் “நீதி வெல்லும்!” என்று பதிவு செய்து, சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

விஜயின் இந்த பதிவு சமூக ஊடகங்களில் வேகமாக பரவி, அவரது ஆதரவாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TVK Vijay Karur Stampede CBI Investigation DMK Supreme Court


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->