பாஜகவிடம் அடிமையாக இருந்த திமுக... நாக்கை தொங்கப் போட்டுக்கொண்டு... தவெக பதிலடி!
Karur Stampede TVK Vijay Supreme Court DMK Mk Stalin
தமிழக வெற்றிக் கழக நிர்வாகி லயோலா மணி விடுத்துள்ள கண்டன அறிக்கையில், "பிஜேபியிடம் அடிமையாக இருந்த நீங்கள் எங்களை பார்த்து அடிமை என்று சொல்வதற்கு கேவலமாக இல்லையா?
ஐயா வாஜ்பாய் அமைச்சரவையில் நாக்கை தொங்கப் போட்டுக்கொண்டு அதிகாரத்தில் இருந்தது யார்?
1999 நாடாளுமன்ற தேர்தல், 2001 சட்டமன்றத் தேர்தல் என்று பிஜேபியிடம் சரணடைந்து கிடந்த நீங்கள் பேசுவதற்கு துளி அளவும் தகுதி கிடையாது.
பிஜேபி என்ற கட்சியை தமிழ்நாட்டில் வளர்த்து விட்டவார்களே நீங்கள்தான்.
குஜராத் கலவரத்தை எதிர்க்காமல் மறைமுகமாக ஆதரித்து பேசியவர் ஐயா கருணாநிதி அவர்களும், உங்கள் திமுக கட்சியும் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.
குஜராத் கலவரத்திற்கு பிறகுதான் மோடி அவர்களை மிகவும் நல்லவர் என்று சொன்னவர் ஐயா கருணாநிதி அவர்கள்.
பாபர் மசூதி இடிப்புக்கு பிறகுதான் பிஜேபியுடன் கூட்டணி வைத்தீர்கள்.
சிறுபான்மை மக்களுக்கு பாதுகாவலர்கள் என்று இன்றுவரை ஏமாற்றிக் கொண்டிருக்கிறீர்கள்.
வெள்ளைக் கொடை பிடித்து பிஜேயிடம் அடிமையாக இருந்த காலங்கள் நினைவில் இருக்கிறதா?
எங்கள் கட்சியையும், எங்கள் தலைவரையும் இழிவாக கேலி சித்திரம் செய்து விமர்சித்தால் நாங்களும் இழிவாக விசாரிப்போம்.
கொள்கையைக் காற்றில் பறக்க விட்டுவிட்டு பிஜேபி, காங்கிரஸ் என்று மாறி மாறி கூட்டணி வைத்து அதிகாரத்தை சுயநலத்திற்காக பயன்படுத்தி கொண்ட நீங்கள் எங்களை பேசுவதற்கு அருகதை கிடையாது.
மோடி அவர்கள் தமிழ்நாட்டிற்கு வருவது பெருமை என்று உங்கள் அமைச்சர்கள் பேசி வருகிறார்கள்.
ஐயா கருணாநிதி அவர்களும், ஐயா ஸ்டாலின் அவர்களும் பல வழக்குகளில் CBI வேண்டும் என்று கேட்டுள்ளார்கள். போராடியும் உள்ளார்கள்.
பலமுறை உங்கள் அமைச்சர்கள் மீது ரெய்டு நடந்தது.அவசர அவசரமாக டெல்லி சென்று காலில் விழுந்தீர்கள் என்று சொல்கிறார்கள். அதன்பிறகு விசாரணை கிடப்பில் போட்டு விட்டார்கள் என்று சொல்கிறார்கள்.
எல்லாம் மக்கள்தான் சொல்கிறார்கள்.
நாங்கள் பிஜேபியுடன் கூட்டணி என்று எந்த இடத்திலும் சொல்லவில்லை. பிஜேபி எங்கள் கொள்கை எதிரி என்று சொல்லி வருகிறோம்.
மக்களிடம் அவதூறு பரப்பும்போதே தெரிகிறது.உங்களுக்கு எவ்வளவு பயம் இருக்கிறதென்று.
களத்தில் சந்திப்போம்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Karur Stampede TVK Vijay Supreme Court DMK Mk Stalin