திருச்சியில் விஜய் வைத்த குற்றச்சாட்டு... திமுக மஸிஹா அன்பில் மகேஷ் கொடுத்த பதில்!
TVK Vijay Election campagin DMK anbil mahesh
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசாரத்தை இன்று திருச்சியில் ஆரம்பித்தார். விமான நிலையத்திலிருந்து 8 கி.மீ தூரத்தை தொண்டர்கள் வெள்ளத்தில் 4 மணி நேரம் கடந்து மரக்கடை பகுதிக்கு வந்த அவர், பிரசார மேடையில் உரையாற்றினார்.
விஜய் தனது பேச்சில், திருச்சியில் இரண்டு அமைச்சர்கள் இருந்தும் பொதுமக்களுக்கு பெரிதாக பயனளிக்கவில்லை என்று குற்றம்சாட்டினார். காவிரி ஆறு இருந்தும் குடிநீர் பிரச்சனை தொடர்கிறது; ஆனால் தீர்வு காணாமல் மணல் கொள்ளை நடைபெறுகிறது என விமர்சித்தார். மேலும், திமுக அரசு நிறைவேற்றாத வாக்குறுதிகளையும் பெண்கள் பாதுகாப்பையும் குறித்து பேசினார்.
திருச்சியில் தற்போது கே.நேரு மற்றும் அன்பில் மகேஷ் ஆகியோர் அமைச்சர்களாக இருப்பதால், இவர்களையே விஜய் குறிவைத்துள்ளதாகக் கருதப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, சென்னையில் இருந்து திருச்சிக்கு வந்த அமைச்சர் அன்பில் மகேஷிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். “விஜய், இரண்டு அமைச்சர்கள் இருந்தும் திருச்சிக்காக எதுவும் செய்யவில்லை என்று விமர்சித்துள்ளார். அவரது பிரசாரத்தில் அதிகமான மக்கள் திரண்டிருக்கிறார்கள். இதற்கு உங்கள் பதில் என்ன?” என கேட்டனர்.
அதற்கு அன்பில் மகேஷ், “நான் முழு விவரத்தையும் இன்னும் பார்க்கவில்லை. இப்போதுதான் விமானத்தில் வந்து இறங்கியுள்ளேன். பார்த்த பிறகு கருத்து சொல்கிறேன். கூட்டம் அதிகமாக வந்ததாகக் கூறுகிறார்கள். அதைத் துல்லியமாக ஆய்வு செய்தபின் கருத்து தெரிவிப்பேன்.
ஆனால் விஜய் கூட்டத்திற்கு வந்தவர்களில் பலரின் குடும்பங்கள், தமிழக அரசின் நலத்திட்டங்களின் பயன்களை ஏற்கனவே பெற்றுள்ளனர். மகளிர் உரிமைத் திட்டம், புதுமைப் பெண் திட்டம், காலை உணவு திட்டம் போன்றவற்றில் அவர்கள் பயன்பெற்றிருப்பார்கள்” என்று கூறினார்.
English Summary
TVK Vijay Election campagin DMK anbil mahesh