விஜயின் வீட்டிற்கு அடையாளம் தெரியாத நபர் வெடிகுண்டு மிரட்டல்!
TVK Vijay Bomb thread POlice
சென்னை நீலாங்கரையில் உள்ள தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜயின் வீட்டிற்கு அடையாளம் தெரியாத நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இன்று அதிகாலை விஜயின் வீட்டில் வெடிகுண்டு வெடிக்கப்போவதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம அழைப்பு வந்தது. இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் போலீசார் உடனடியாக விஜயின் இல்லத்திற்கு சென்று சோதனை நடத்தினர்.
சோதனையில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதால், இது வெறும் மிரட்டல் புரளி என தெரியவந்தது.
இந்த மிரட்டலை விடுத்த மர்ம நபரை கண்டறிய போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் அரசியல் தலைவர்கள் மற்றும் திரைத்துறையினர் மீது இத்தகைய வெடிகுண்டு மிரட்டல்கள் அதிகரித்து வருவது கவலைக்குரியதாக கூறப்படுகிறது.
English Summary
TVK Vijay Bomb thread POlice