த.வெ.க மாநாட்டுக்கு இதுவரை அனுமதி தரவில்லை! பேச்சுவார்த்தைக்கு அழைப்பு - விழுப்புரம் எஸ்பி தகவல்!
TVK Maanadu Issue Vilupuram SP
தமிழக வெற்றி கழகம் மாநாடு தொடர்பாக நேரில் ஆலோசனை நடத்த கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்துக்கு காவல்துறை தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் விஜய் கட்சியின் மாநாடு நடத்துவது தொடர்பாக நேரில் ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்பட உள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தற்போது வரை தமிழக வெற்றி கழகத்தின் மாநாட்டிற்கு அனுமதி வழங்கப்படவில்லை என்றும், விழுப்புரம் மாவட்ட எஸ்பி தகவல் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே மாநாடு நடத்த அனுமதி அளிப்பது தொடர்பாக 21 கேள்விகளை போலீசார் த.வெ.க கட்சியிடம் கேட்டு இருந்தனர். இதற்கு விஜய் தரப்பு நேற்று முன்தினம் பதிலளித்து இருந்தது.
மேலும், த.வெ.க. மாநாடு நடைபெறும் தேதியை விஜய் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளதாகவும், இதற்காக இன்று வில்லிவாக்கத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாகவும், தொடர்ந்து காலை 11.17 மணிக்கு த.வெ.க. மாநாடு தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
TVK Maanadu Issue Vilupuram SP