நம்ப வைத்து ஏமாற்றுவதில் கைத்தேர்ந்தவர்கள் திமுகவினர்! மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் - தவெக லயோலா மணி!
TVK Loyola mani condemn to DMK MK Stalin Govt
தவெக நிர்வாகி லயோலா மணி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "தேர்தல் நெருங்கி விட்டது. பொது மக்கள் கவனமாக இருக்க வேண்டும்.
நான்கரை ஆண்டுகள் மக்களுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு, இப்பொழுது ஓட்டுக்காக வாய்க்கு வந்ததை எல்லாம் #திமுக சொல்லும். தயவு செய்து நம்பி விடாதீர்கள்.
நம்ப வைத்து ஏமாற்றுவதில் கைத்தேர்ந்தவர்கள் திமுகவினர் என்பதை தமிழ்நாட்டு மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
சிந்தித்து வாக்கு செலுத்துங்கள். உங்களின் ஒவ்வொரு வாக்கும் மிகப் பெரிய ஜனநாயக ஆயுதம்.
அந்த ஆயுதத்தின் மூலம் உண்மையான மக்களாட்சியை உருவாக்க முன் வாருங்கள்.
பொய் சொல்லி மக்களை நம்ப வைத்து விடலாம் என்று கங்கணம் கட்டிக் கொண்டு
திமுக வேலை செய்ய ஆரம்பித்து விட்டது.
இனியும் நாங்கள் ஏமாறுவதற்கு இளிச்சவாயர்கள் கிடையாது என்பதை நாம் உணர்த்தும் காலம் வந்து விட்டது.
ஆண்டாண்டு காலமாக இவர்கள் சொல்லும் பொய்யை நம்பி அடிமையாக இருந்த காலம் மலையேறிப் போய்விட்டது என்று ஆளும் திமுக கட்சிக்கு நாம் பாடம் புகட்டுவோம்.
மக்கள் விரோத திமுகவை மக்களாகிய நாம்தான் திருத்த வேண்டும்.
மக்கள்தான் எஜமானர்கள் என்று திமுகவிற்கு புரிய வைக்க வேண்டும்.
அதிகார மமதையோடு செயல்படும் கும்பல்களிடம் இருந்து அதிகாரத்தை புடுங்க வேண்டும்.
அதற்கு சட்டம் நமக்கு கொடுத்துள்ள அரிய வாய்ப்புதான் தேர்தல் என்றும் ஜனநாயக முறை.
அந்த ஜனநாயக முறையின் மூலம் ஜனநாயகத்தை காக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து மாற்றத்தை ஏற்படுத்துவோம்.
English Summary
TVK Loyola mani condemn to DMK MK Stalin Govt