சட்டமன்றத்தில் தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு: அடுத்தடுத்து ஆதரவு தரும் கட்சிகள்! - Seithipunal
Seithipunal


தமிழகச் சட்டமன்றத்தில் இன்று நடைபெற்று வரும் பரபரப்பான நம்பிக்கை வாக்கெடுப்பில், முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு ஆதரவு தெரிவிக்கும் கட்சிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது:

தீர்மானம்: இன்று காலை 9.30 மணிக்குச் சட்டமன்றம் கூடியதும், முதலமைச்சர் விஜய் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முன்மொழிந்தார்.

காங்கிரஸ் ஆதரவு: தவெக அரசுக்கு ஆதரவு தெரிவிப்பதாகக் காங்கிரஸ் கட்சியின் 5 சட்டமன்ற உறுப்பினர்களும் வாக்கெடுப்பில் தங்களது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆதரவு: இதனைத் தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI-M) 2 சட்டமன்ற உறுப்பினர்களும் தவெக அரசுக்குத் தங்களது ஆதரவை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளனர். மேலும் விசிகவும் ஆதரவை உறுதி செய்துள்ளார்.

ஏற்கனவே விசிக, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் ஐயூஎம்எல் ஆகிய கட்சிகள் ஆதரவு அளிப்பதாகத் தெரிவித்துள்ள நிலையில், தற்போது காங்கிரஸ், விசிக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர்களின் ஆதரவு பதிவாகியுள்ளது தவெக அரசு தனது பெரும்பான்மையை நிரூபிப்பதை மேலும் உறுதி செய்துள்ளது.

இச்சம்பவங்கள் அனைத்தும் சட்டமன்ற வரலாற்றில் முதல்முறையாக நேரலையாக ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TVK Governments Trust Vote in Assembly More Parties Extend Support


கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..




Seithipunal
--> -->