நகையை திருடியவர் திமுகவா? தவெகவா? உண்மை என்ன? பெரும் விவாதமாகும் அர்ஷிதா அரசியல் அடையாளம்!
TVK DMk Gold robbery case
கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் பகுதியில் உள்ள வழக்கறிஞர் வீட்டில் அர்ஷிதா என்ற பெண் 11 சவரன் நகையை திருடியதாக புகார் அளிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக, அர்ஷிதா தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்தவர் என சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
இதற்கு தமிழக வெற்றி கழகம் அதிகாரப்பூர்வமாக மறுப்பு வெளியிட்டுள்ளது. அந்தக் கட்சியின் கன்னியாகுமரி மேற்கு மாவட்ட செயலாளர் வெளியிட்ட அறிக்கையில், “அர்ஷிதா எங்கள் கட்சியில் எந்த வகையிலும் பதவி வகிப்பவரல்லர். அவருக்கு எந்த பொறுப்பும் வழங்கப்படவில்லை. அவரை கட்சியுடன் தொடர்புபடுத்திய செய்திகள் அடிப்படையற்றவை. இப்படியான தவறான செய்திகளை வன்மையாகக் கண்டிக்கிறோம். ஊடகங்கள் உண்மையை மதித்து செயல்பட வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது.
இதே நேரத்தில், கைது செய்யப்பட்ட அர்ஷிதா திமுகக் கொடி கட்டிய காரின் முன் இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதனை தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்தவர்கள் பரப்பி, அவர் திமுகவுடன் தொடர்புடையவர் என வலியுறுத்துகின்றனர்.
மாறாக, அர்ஷிதா தமிழக வெற்றி கழக நிர்வாகிகளோடு இருப்பது போலக் காட்டும் புகைப்படங்களையும் திமுக ஆதரவாளர்கள் பகிர்ந்து வருகின்றனர். இதனால், அர்ஷிதாவின் அரசியல் தொடர்பு குறித்து சமூக வலைத்தளங்களில் கடுமையான விவாதம் நிலவுகிறது.
English Summary
TVK DMk Gold robbery case