மோடி, ஸ்டாலின் இடையே ஸ்டிக்கர் ஒட்டுவதில் பிரச்சனை... டிடிவி தினகரன் பரபரப்பு ட்விட்..!! - Seithipunal
Seithipunal


மோடி ஸ்டிக்கர் ஒட்டுவதா..? ஸ்டாலின் ஸ்டிக்கர் ஒட்டுவதா..? என்ற போட்டியில் 250 புதிய கால்நடை ஆம்புலன்ஸ் வாகனங்கள் பயன்பாட்டுக்கு வராமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. சுமார் ரூ.39 கோடி செலவில் வாங்கப்பட்ட 250 புத்தம் புதிய கால்நடை ஆம்புலன்ஸ் வாகனங்கள் பயன்பாட்டுக்கு வராமல் 6 மாதங்களாக பூந்தமல்லியில் உள்ள டீலரிடம் இருந்து வருகிறது. 

அவற்றில் பிரதமர் மோடியின் படத்தை ஒட்டுவதா அல்லது முதல்வர் மு.க. ஸ்டாலின் படத்தை ஒட்டுவதா என்ற போட்டிதான் அவை பயன்படுத்தப்படாததற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது. இதற்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் புகைப்படம் ஒட்டுவதில் போட்டி போடாமல் கால்நடை ஆம்புலன்ஸ்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் "கால்நடை ஆரோக்கியம் மற்றும் நோய்க் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் வாங்கப்பட்ட 250 ஆம்புலன்ஸ்கள் பயன்படுத்தப்படாமல் வெறுமனே நிறுத்தி வைத்திருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.

ஆம்புலன்ஸ்களில் பிரதமர் படத்தை ஒட்டுவதா அல்லது முதலமைச்சர் படத்தை ஒட்டுவதா என்ற சர்ச்சையாலும், ஆம்புலன்ஸ்களை இயக்க ஆட்கள் நியமிக்கப்படவில்லை என்பதாலும் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படவில்லை என்றும் தகவல்கள் கூறுகின்றன.

பால் உற்பத்தியில் பெரும் பங்கு வகிக்கக்கூடிய பசு மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளுக்கு அவசர சிகிச்சை அளிப்பதற்காக வாங்கப்பட்ட ஆம்புலன்ஸ்களை பயன்படுத்தாமல் வைத்திருப்பது கண்டிக்கத்தக்கதாகும்.

மக்கள் வரிபணத்தில் வாங்கப்பட்ட ஆம்புலன்ஸ்களில் யாருடைய படத்தை ஒட்டுவது என்பதை சர்ச்சையாக்காமல், அவற்றை இயக்க போதுமான ஆட்களை நியமித்து ஆம்புலன்ஸ்களை உடனே பயன்பாட்டுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்"என தனது டுவிட்டர் பக்கத்தில் வலியுறுத்தியுள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TTV insists on bringing animal ambulances into use


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?
Seithipunal
--> -->